Followers

Saturday, January 19, 2013

மேஷம்: ஐந்தாவது வீட்டு தசா பலன்



ணக்கம் ண்பர்களே!
     மேஷராசியை லக்கினமாக கொண்டவர்களுக்கு ஐந்தாவது வீட்டு தசா நடந்தால் என்ன பலனை தரும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்

மேஷத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். சூரியன் இந்த வீட்டில் உச்சம் அவர் லக்கனத்தில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால்

உடல்நலத்துடன் இருப்பார் விளையாட்டில் ஆர்வம் இருக்கும். மந்திர ஆற்றலுடன் விளங்குவார் மதச்சடங்குகளை ஆதரிப்பார். குழந்தைகள் மீது அதிக பாசத்துடன் விளங்குவார். வாழ்க்கை வாழ்வதற்க்கே என்ற எண்ணத்துடன் வாழ்பவர்.

ஐந்தாவது வீட்டு அதிபதி இரண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷ லக்கனத்திற்க்கு இரண்டாவது வீடாக வருவது ரிஷபம் அதன் அதிபதி சுக்கிரன். சூரியன் இந்த வீட்டில் பகையாகிறார்.

இசையில் ஆர்வம் கொள்வார். திரைபடதுறையில் அல்லது நாடகதுறையில் ஆர்வம் பிறக்கும். இந்த துறையில் லாபத்தை கொள்வார்கள் ஆனால் தொடர்ந்து லாபத்தை சம்பாதிக்கமுடியாது திடீர் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். பெண்குழந்தைகளால் லாபத்தை பெறலாம்.

ஐந்தாவது வீட்டு அதிபதி மூன்றாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷ லக்கனத்திற்க்கு மூன்றாவது வீடாக வருவது மிதுனம் இந்த வீட்டில் சூரியன் சமம்.

ஏஜென்சி தொழில் லாபம் தரும். மந்திரங்கள் வழியில் லாபத்தை பார்க்கலாம். யாகம் வளர்ப்பது வேதம் ஓதுவது போன்றவையிலும் வருமானம் வரும். விளையாட்டு துறையில் பிரகாசிக்க முடியும் அதுவும் மூளையை வைத்து விளையாடும் விளையாட்டுகளில் வெற்றி வரும். குழந்தைகள் நல்ல முறையில் வளர்வார்கள்.

ஐந்தாவது வீட்டு அதிபதி நான்காவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷ லக்கனத்திற்க்கு நான்காவது வீடாக வருவது கடகம் அதன் அதிபதி சந்திரன். சூரியனுக்கு இந்த வீடு நட்பு

ஆண் குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். பெண் குழந்தைகளாக இருந்தால் பிரச்சினை ஏற்படாது. காதலில் தோல்வியை தழவுவார்கள். எந்த விசயத்திலும் முடிவு செய்யமுடியாத நிலை ஏற்படும். வாழ்க்கையிலும் தோல்வியை சந்திக்கும் நிலையை ஏற்படுத்தும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஐந்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடந்தால் மேஷ லக்கனத்திற்க்கு ஐந்தாவது வீடாக வருவது சிம்மம் அதன் அதிபதி சூரியன். இந்த வீட்டில் ஆட்சி செய்கிறார். 

ஆண் குழந்தைகள் அதிகமாக இருக்கும். நல்ல அறிவாற்றலுடன் விளங்குவார். எடுத்த எந்த காரியத்திலும் வெற்றி வாகை சூடுவார். இறைவனின் அன்புக்கு பாத்திரமானவர்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஆறாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷத்திற்க்கு ஆறாவது வீடாக வருவது கன்னி அதன் அதிபதி புதன். சூரியனுக்கு இந்த வீடு சமம்.

மந்திரசித்தி எளிதில் கிடைக்கும். எதை செய்தாலும் அதில் வெற்றி பெற்று லாபத்தை பெறுவார். பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டு லாபம் சம்பாதிக்கலாம். 

ஐந்தாவது வீட்டு அதிபதி ஏழாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷ லக்கனத்திற்க்கு ஏழாவது வீடாக வருவது துலாம் அதன் அதிபதி சுக்கிரன். சூரியனுக்கு இந்த வீடு நீசம்

துணைவர் மூலம் வருமானம் வரும். தொழில் கூட்டாளிகள் இவருக்கு நல்ல உதவி செய்வார்கள். அதிலும் தொழில் கூட்டாளிகள் பெண்களாக இருந்தால் நல்லது. பணஉதவி துணைவர் மூலம் வரும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி எட்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷ லக்கனத்திற்க்கு எட்டாவது வீடாக வருவது விருச்சிகம் அதன் அதிபதி செவ்வாய். சூரியனுக்கு இந்த வீடு நட்பு.

அடிக்கடி விபத்து ஏற்படும். தீ காயம் ஏற்படும். எதிலும் மனசோர்வு ஏற்படும். அடுத்தவர்களிடம் ஏமாந்து போவார். வாழ்க்கை போராட்டமாக இருக்கும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி ஒன்பதாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷ லக்கனத்திற்க்கு ஒன்பதாவது வீடாக வருவது தனுசு அதன் அதிபதி குரு. சூரியனுக்கு இந்த வீடு நட்பு

பெரியவர்கள் மூலம் உதவி பெறுவார் சமுதாயத்தில் நல்ல மதிப்பு இருக்கும். மதசம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் அடிக்கடி கலந்து கொள்வார். புனித தலங்கள் சென்று வருவார். அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துக்கொள்வார். 

ஐந்தாவது வீட்டு அதிபதி பத்தாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷ லக்கனத்திற்க்கு பத்தாவது வீடாக வருவது மகரம் அதன் அதிபதி சனி. சூரியனுக்கு இந்த வீடு பகை

அனைத்து துறையிலும் வெற்றி பெறுவார். பேரும் புகழம் பெற வைப்பார் அதே நேரத்தில் சரிவையும் சந்திக்க வைப்பார். வியாபார செய்வதில் நல்ல திறமைச்சாலி.

ஐந்தாவது வீட்டு அதிபதி பதினோராவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷ லக்கனத்திற்க்கு பதிகோராவது வீடாக வருவது கும்பம் அதன் அதிபதி சனி. சூரியனுக்கு இந்த வீடு பகை

நீங்கள் எதிர்பாராத வகையில் பணவரவு உங்களுக்கு வரும். எதிலும் வெற்றி பெறுவார். வாழ்க்கையில் தோல்வி என்பது இருக்காது. மனசஞ்சலம் ஏற்படும்.

ஐந்தாவது வீட்டு அதிபதி பனிரெண்டாவது வீட்டில் சம்பந்தப்பட்டு தசா நடைபெற்றால் மேஷ லக்கனத்திற்க்கு பனிரெண்டாவது வீடாக வருவது மீனம் அதன்  அதிபதி குரு. சூரியனுக்கு இந்த வீடு நட்பு

காரணமின்றி எப்பொழுதும் கவலை ஏற்படும். குழந்தைகளால் தொந்தரவு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். தேவையில்லாமல் ஜாமீன் கையொழுத்து போடகூடாது. குழந்தைகளின் உடல்நிலை கவலை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: