Followers

Tuesday, January 1, 2013

பூர்வ புண்ணியம் 7



வணக்கம் நண்பர்களே !
                     ஐந்தாவது வீட்டை வைத்து பூர்வபுண்ணியத்தை கடந்த பதிவில் பார்த்தோம் இப்பதிவிலும் பார்க்கலாம்.

ஒரு ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டை பார்க்கும் போது முதலில் அந்த ஐந்தாவது வீட்டில் யார் அமர்ந்திருக்கிறார் என்று பாருங்கள். அதன் பிறகு ஐந்தாவது வீட்டிற்க்கு உரியவர் யார் என்று பாருங்கள் அதன் பிறகு குருவின் நிலையை பாருங்கள்.ஐந்தாவது வீட்டில் அமர்ந்துள்ள கிரகத்தின் நிலை என்ன என்று பார்க்க வேண்டும். ஐந்தாவது வீட்டை வேறு ஏதாவது கிரகத்தின் பார்வை படுகிறதா என்றும் பார்க்க வேண்டும். 

ஒருவரின் பூர்வபுண்ணியத்தை பார்க்க நிறைய வழி இருக்கிறது அதனை விட நல்ல பயிற்சி செய்த ஒருவர் அவரை பார்த்தவுடனே இவரைப்பற்றி தெரிந்துக்கொள்வார்கள் அதனை விட்டுவிடுவோம் நாம் விசத்திற்க்கு வருவோம். 

ஐந்தாவது வீட்டில் தீயகிரங்கள் தங்கினால் பிரச்சினை என்று சொல்லிருந்தேன். ஐந்தாவது வீட்டில் அமரும் நல்ல கிரகமும் பிரச்சினையை கொடுக்கும். ஐந்தாவது வீட்டு காரகன் என்று அழைக்கப்படுபவர் குரு இவர் ஐந்தில் அமர்ந்தால் பிரச்சினை தான் வரும். குரு அமர்ந்த இடம் பாழ் என்று சொல்வார்கள் அமரும் இடத்தின் பலனை கெடுத்துவிடும்.

ஐந்தாவது வீட்டில் அமரும் கிரகம் தீயகிரகமாக இருக்கிறது அப்படி என்றால் பிரச்சினை ஏதோ ஒரு வழியில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளவேண்டியது தான். இது 33 சதவீதம் சிக்கலில் உள்ளது என்று எடுத்து்க்கொள்ளவேண்டியது தான். அடுத்து குருவின் நிலையை பாருங்கள் குரு எப்படி இருக்கிறார் என்று பார்த்துவிடவேண்டும் அவர் தீய கிரகத்துடன் இருக்கிறார அல்லது நீசமாக இருக்கிறார என்று பார்த்துவிட்டு அவர் நன்றாக இருந்தால் சரி இவரை வைத்து நாம் முன்னேறிவிடலாம் என்று வைத்துக்கொள்ளலாம். அவர் சரியில்லை என்றால் 33 சதவீதம் சிக்கல் ஆக மொத்தம் 66 சதவீதம் பிரச்சினை தெரிந்துவிட்டது. 

பிறகு ஒரு சோதனை ஐந்தாவது வீட்டு அதிபதியின் நிலை எப்படி இருக்கிறது என்று பார்க்கவேண்டும். இவர் எந்த கிரகத்தோடு இருக்கிறார் இவர் உச்சம் பெற்று இருக்கிறார அல்லது சொந்தவீட்டில் இருக்கிறா என்று பார்க்க வேண்டும். இவர் சரியாக இருந்தால் இவ்வளவு கஷ்டத்திலும் ஒரு ஆறுதல் இருக்கிறது இவரை வைத்து ஜெயித்துவிடலாம் என்று நாம் கணக்கு போட்டு காப்பாற்றிவிடலாம். இவரும் போய்விட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள் 33 சதவீதம் கூடுதலாக பிரச்சினை சேர்ந்துவிட்டது என்று பொருள். ஆக மொத்தம் 99 சதவீதம் பூர்வபுண்ணியத்தில் பிரச்சினையை ஏற்படுத்துகிற அமைப்பு உள்ள ஜாதகம் இவருடையது என்று நாம் நினைத்துவிடலாம். 

இறுதிகட்ட சோதனை 1 சதவீதம் மீதம் உள்ளது அல்லவா அதனை எப்படி கண்டுபிடிப்பது அவர் தான் லக்கினாதிபதி. லக்கினாதிபதியின் நிலை எவ்வாறு இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டால் போதும். இவர் பல்பு வாங்ககூடாது. இவரும் உங்கள் ஜாதகத்தில் அடிப்பட்டுவிட்டால் உங்களை ஆண்டவன் வந்தாலும் காப்பாற்றமுடியாது என்று சொல்லலாம. என்ன செய்வது ஆண்டவனே உங்களுக்கு பிரச்சினை என்றால் என்ன செய்வது?

இதற்கும் ஒரு வழியை ஆண்டவன் செய்திருக்கிறான். அது என்ன என்று வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Unknown said...

என் நிலைமை இப்படிதான் போல இருக்கு...பூர்வபுன்யதுல .எத்தனை சதவிதம் எனக்கு ஆப்புன்னு தெரியலயே....வழி இருந்தால் கூறுங்கள் ...எதுனா பிரச்சனைனா கடவுள்கிட்ட போகலாம்....அந்த கடவுளே ..கைவிட்டுடா...எங்க போறது...என்ன கொடுமை சார் இது ..பிரச்சனைய நீங்கதான் சொன்னீங்க..அதனால தீர்வும் நீங்கதான் சொல்லணும்....தீர்வு சொல்றவரைக்கும் உங்கள தொந்தரவு பண்ணிட்டே இருப்பேன்..மன்னிச்சிடுங்க...பிரச்சனைய சொல்றவங்கலாலா ..தீர்வும் சொல்லமுடியும்....அதனால உங்கள விடுரமரி இல்ல ...எனக்கு வேற வழி தெரியல .....