Followers

Saturday, January 19, 2013

குலதெய்வம்



வணக்கம் sir,
                   அய்யா எனக்கு மிக பெரிய சந்தேகம் அதற்கான விடையே உங்களிடம் எதிர் பாக்கிறேன். உங்களுடைய குலதெய்வ அருள் என்ற பகுதியே படித்து விட்டு என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று குலதெய்வ கோவிலுக்கு தை1 என் ஜாதகத்தோடு சென்று வந்தேன். பார்த்தல் நேற்று என் நகை தொலைந்து விட்டது. இப்பொழுது இருக்கும் நிலைமையில் தாங்க முடியவில்லை. குல தெய்வ கோவிலுக்கு சென்றால் பிரச்சனை ஏற்படுமா? 

என் அப்பா இறப்பதற்கு முன் குல தெய்வ கோவிலுக்கு சென்றோம் சென்று வந்த 1 வாரம் கூட ஆக வில்லை அவர் இறந்து விட்டார்.
கும்பா ஆபிஷேகம் நடை பெற்றது சென்று வந்த மறுநாள் என் தம்பி பெரிய கடன் பிரச்சனையில்  மாட்டி கொண்டான்.
இப்பொழுது நான் சென்று வந்து 1 வாரம் கூட ஆகவில்லை இப்படி ஆகிவிட்டது.இது எல்லாம் ஏன் நடைபெறுகிறது ?

இதைவிட பெரிய சாபம் என் குடும்பத்தில் நடை பெற்றது.என் அப்பா வழி குடும்பத்தில் எந்த பெண்ணுக்கு திருமணம் நடை பெற்றாலும் ஒருவர் இறந்து விடுவர். தற்ப்பொழுது என் அப்பா வழி குடும்ப்பத்தில் உள்ள திருமணம் ஆகாத ஒரே பெண் நான் மட்டுமே.என் திருமணத்தில் யாருக்கு என்ன ஆக போகிறதோ தெரியவில்லை.

என் சந்தேகம் குல தெய்வம் காக்க தானே செய்யும்?ஆனால் என் குடும்பத்தில் எல்லாம் தலை கீழாக நடை பெறுகிறது இது எதனால்?முன்னோர்கள் பாவம் பண்ணி இருந்தால் நாங்கள் என்ன செய்வோம்? குல தெய்வத்தை சாந்தி படுத்துவது எப்படி?குல தெய்வ அருள் பெற என்ன செய்ய வேண்டும்?

தங்கள் தான் இதற்கு வழி காட்ட வேண்டும். தயவு கூர்ந்து வழி  காட்டுங்கள்.

பெயரை வெளியிடாத ஒரு வாசகி.

பதில்

தங்கள் குடும்பத்தில் இந்த நிகழ்வு ஏற்பட்டதற்க்கு வருத்ததை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் குலதெய்வத்திற்க்கு வருட வருடம் நடைபெறும் குடும்பபூஜையில் உங்கள் குடும்பம் பங்கு கொள்கிறாதா என்று தெரியவில்லை. ஒரு சிலருக்கு வருடபூஜையில் கலந்துக்கொள்ளவில்லை என்றாலும் இந்த பிரச்சினை ஏற்படும். அடுத்ததாக உங்களின் குலதெய்வம் உங்களுக்கு சாதகமாக இருக்கிறாதா என்று பார்க்க வேண்டும். உங்களின் குலதெய்வத்திற்க்கு செல்லும்போது அதற்குள்ள படையலை நாம் செய்யவேண்டும். குலதெய்வத்திற்க்கு முறையான பொங்கல் படையல் செய்யவேண்டும். இப்படி செய்யாமல் இருந்தால் உங்களுக்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


2 comments:

Rajaram said...

மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம் தான். முதலில் நீங்கள் உங்கள் சொந்த ஊரில் குடியிருந்தால் அதைவிட்டு வெளியேறுங்கள். குலதெய்வம்,பூர்வபுண்ணியம் நமக்கு சாதகமாக இல்லாதபோது முதலில் இதைத் தான் செய்யவேண்டும். குறைந்தபட்சம் 100 கி.மீ.க்கு அப்பால் செல்வது தான் சாலச்சிறந்தது.பூர்வபுண்ணியம் பாதிக்கப்பட்டால் இதுதான் முதல் பரிகாரம்.

rajeshsubbu said...

சரியாக சொல்லியுள்ளீர்கள் ராஜாராம்