Followers

Wednesday, August 10, 2016

அம்மன் பூஜை

ணக்கம்!
          அம்மன் பூஜை வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும். ஆடி வெள்ளி என்பதால் அந்த நாளை தேர்வு செய்து வைத்தேன். ஆடி வெள்ளி அன்று பூ விலை அதிகம் என்பதால் இந்த நாளை தேர்வு செய்யலாமா அல்லது வேறு ஒரு நாளில் வைக்கலாமா என்று சிந்தனை செய்துக்கொண்டு இருந்தேன்.

அம்மன் அருளால் வாடிக்கையாக பூ கட்டும் நபர் ஒத்துக்கொண்டார். கொஞ்சம் விலை அதிகம் என்றாலும் அன்று தருகிறேன் என்று சொன்னது பெரிய விசயம். ஒரு வழியாக அன்றைய நாள் முடிவாகிவிட்டது.

அம்மன் பூஜைக்கு மாதந்தோறும் பணம் அனுப்புவர்கள் அத்தனை பேரும் அனுப்பிவிட்டனர். எனது வேண்டுகோளை ஏற்று புதிய நண்பர்களும் அனுப்பி இருக்கின்றீர்கள் அதற்கு நன்றி மற்றும் அம்மன் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

ஜாதககதம்பத்தை படிக்கும் அனைவரும் பங்குக்கொள்ளவேண்டும் என்று கேட்டுருந்தேன் கொஞ்சம் பேர் தான் பங்குக்கொண்டு இருக்கின்றீர்கள். நிறைய பேர்களின் பொருளாதார நிலை கொஞ்சம் கடினம் என்று நினைக்கிறேன்.

உங்களின் பொருளாதாரத்தை உயர்த்த பல வழிகளை ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். அதனை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். என்னை ஒரு முறை சந்தித்துவிடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: