Followers

Monday, August 15, 2016

எட்டில் சந்திரன் திருமணவாழ்க்கை கேள்விகுறி


ணக்கம்!
          சந்திரன் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லுவது உண்டு. அதற்கு காரணம் நிறைய அனுபவங்களாக இதனை நான் பார்த்து இருக்கிறேன்.

சந்திரன் நன்றாக இல்லை என்றால் கண்டிப்பாக சம்பந்தப்பட்ட ஜாதகர்களின் வாழ்க்கை நன்றாக இருக்காது. நம்முடைய சோதிடத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் வேலை செய்வதற்க்கு சந்திரன் ஒரு காரணமாக இருக்கிறார். சந்திரன் வழியாக தான் அதிகப்பட்ச பலன்கள் எல்லாம் நடக்கும்.

சந்திரன் ஒருவருடை ஜாதகத்தில் மறைவு ஸ்தானங்களில் இருக்ககூடாது. அதிலும் சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் வாழ்க்கைஅவ்வளவு தான். திருமண வாழ்க்கையில் பல அடிகளை சம்பந்தப்பட்ட ஜாதகர் வாங்குவார்.

சந்திரன் எட்டாவது வீட்டில் இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு சிறப்பு பரிகாரம் என்ற ஒன்று இருக்கின்றது. அது பூஜை வழியாக தான் செய்யமுடியும். இதுவரை நீங்கள் சந்திரனுக்கு பரிகாரம் செய்து அது பயன் தரவில்லை என்றால் இதற்கு என்று நீங்கள் என்னை அணுகி பரிகாரம் செய்துக்கொள்ளலாம். குறிப்பாக இந்த மாதிரியான அமைப்பு இருக்கின்றவர்கள் மட்டும் அதனை செய்துக்கொள்ளலாம்.

எட்டாவது வீடு திருமணம் என்பதை காட்டுவதால் பரிகாரம் செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வது உண்டு. கொஞ்ச பணம் அதிகம் இந்த பரிகாரத்திற்க்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதனை செய்துக்கொள்ளலாம்.

சந்திரன் எட்டில் இருந்து வாழ்க்கை நன்றாக இருக்கின்றது என்றால் அதற்கு என்று நீங்கள் பரிகாரம் செய்யதேவையில்லை. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி இதனை செய்துக்கொள்ளுங்கள்.

விரைவில் நெய்வேலியில் என்னை சந்திக்கலாம்,

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: