வணக்கம்!
ஒவ்வொருவரும் கடுமையாக கஷ்டப்பட்டு உழைக்கின்றீர்கள். நன்றாக உழைத்து சம்பாதித்து அந்த பணத்தை சேமித்து ஏதாே ஒரு நல்லவழிக்கு பயன்படுத்துகின்றீர்கள். பலர் நிலத்தில் தான் முதலீடு செய்கின்றார்கள்.
இன்றைய காலத்தில் பலர் நிலத்தில் முதலீடு செய்துவிட்டு அந்த நிலத்தை கடைசி வரை காப்பாற்றுவதில்லை என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. நிலத்தை விற்கிறார்கள் அல்லது நிலத்தை பிறரிடம் ஏதோ காரணத்திற்க்காக இழக்கின்றார்கள்.
எனக்கு தெரிந்த பலர் தன்னுடைய நிலத்தை தன் மனைவிக்கு எழுதிவைத்து ஏமாந்தவர்கள் பலர் இருக்கின்றனர். இன்றைய உலகம் கலிகாலம் என்று சொன்னது சரியாக இருக்கின்றது. என்ன தான் மனைவி என்றாலும் அவர்களும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக தன் கணவனிடம் இருந்து பிடிங்கிக்கொண்டு ஏமாற்றுபவர்களாக இருக்கின்றனர். எல்லாரையும் நான் சொல்லவில்லை ஒரு சிலர் இப்படி இருக்கின்றனர்.
உங்களுக்கு சொல்லுவது எல்லாம் உங்கள் மனைவி எல்லாம் எது கேட்டாலும் வாங்கிக்கொடுங்கள். அவர்களிடம் பாசமாக இருங்கள் ஆனால் ஒரு போதும் உங்களின் சொத்தை உங்களின் மனைவி பேருக்கு மாற்றி மட்டும் வைத்துவிடாதீர்கள்.
உங்களுக்கு பிறகு உங்களின் வாரிசுகளுக்கு சேருவது போல் உயில் எழுதிவையுங்கள். நீங்கள் இருக்கும்பொழுதே உங்களின் சொத்தை எழுதி வைத்தால் உங்களை விட்டு போனபிறகு அதன் பிறகு என்னிடம் வந்து புலம்புவதில் அர்த்தம் இல்லை.
உங்களின் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு உங்களுக்கு ஏற்படும் இழப்புகளை எல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள். ஜாதகத்தை எடுத்து அலசி பார்த்தால் தெரிந்துவிடும். ஜாதகத்திற்க்கு தகுந்தார் போல் நடந்துக்கொள்ளலாம்.
சேலம் வரை சென்று இருக்கிறேன். சேலத்தில் இருப்பவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
சேலம் வரை சென்று இருக்கிறேன். சேலத்தில் இருப்பவர்கள் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளவும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment