வணக்கம்!
இன்று காலையில் திலஹோமத்தைப்பற்றி ஒருவர் கேட்டார். திலஹோமத்தைப்பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதற்கு சரியான நேரத்தை இறைவன் கொடுத்துள்ளார்.
திலஹோமம் செய்வது ஒன்றும் தவறு இல்லை அதே நேரத்தில் திலஹோமம் செய்வதற்க்கு சரியான காலம் என்று ஒன்று உள்ளது அந்த நேரத்தில் தான் அதனை செய்யவேண்டும்.
ஒருவர் அனைத்தையும் பெற்றுவிட்டு அனைத்தையும் செய்துமுடித்துவிட்டு அதாவது தன்னுடைய கடமை அனைத்தையும் முடித்துவிட்டு கடைசி காலத்தில் திலஹோமம் செய்யவேண்டும்.
இன்றைய காலத்தில் பல இளைஞர்கள் இந்த ஹோமத்தை செய்து முடித்து இருக்கின்றனர். அதாவது ஹோமம் செய்யும் காலம் என்பது தன்னுடைய கடைசி காலத்தில் இதனை செய்யவேண்டும். நம்ம ஆட்கள் குறைந்த வயதிலேயே செய்துவிடுகின்றனர்.
காரிய தடை ஏற்படுகிறது. பித்ருதோஷம் இருக்கின்றது அதனால் இதனை சோதிடர்கள் சொன்னதால் இதனை செய்தேன் என்று சொல்லுகின்றார்கள். காரிய தடை இருப்பது இருக்கட்டும் ஆனால் அதற்க்காக திலஹோமம் செய்யவேண்டும் என்பதில்லை அதற்கு போய் இதனை செய்யவேண்டாம்.
நம்முடைய அனைத்து கடமையும் முடிவடைந்துவிட்டது என்ற காலம் வரும்பொழுது இதனை செய்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக அதனை செய்வதற்க்கு உகந்த காலம் இளம் வயது கிடையாது.
இராமேஷ்வரத்தில் திலஹோமம் செய்கின்றனர். தற்பொழுது உள்ள சோதிடர்கள் எல்லாம் எல்லா இடத்திலும் செய்கின்றனர். இராமேஷ்வரத்தில் திலஹோமம் செய்தால் கூட அங்குள்ள புரோகிதர்கள் இதனை ஒழுங்காக செய்வதும் கிடையாது என்பது தான் நடைமுறையில் உள்ள உண்மை.
காலம் கடைசியில் திலஹோமம் செய்துக்கொள்ளலாம். உங்களின் கடமையை முடித்துவிட்டு இதனை செய்யுங்கள். அதுவரை இராமேஷ்வரத்திற்க்கு சென்று நீராடிவிட்டு இறைவனை தரிசனம் செய்துவிட்டு வந்தால் போதும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment