Followers

Sunday, August 14, 2016

பிராத்தனை


ணக்கம்!
           ஒரு பதிவு எழுதவேண்டும் என்றாலும் அந்த பதிவு சம்பந்தமாக ஏதாவது ஒரு நிகழ்வு நடந்துள்ளதா என்று பார்த்து தான் பதிவை எழுதவே நான் ஆரம்பிப்பேன். முற்றிலும் தன்னுடைய அனுபவத்திற்க்கு வந்து அதனை எழுதினால் உங்களுக்கும் அது பயன்படும் என்பதால் அப்படி எழுதுவது உண்டு. 

உலகத்தில் உள்ளவர்களுக்காக பிராத்தனை செய்வது நல்லதா என்று ஒருவர் என்னிடம் கேட்டார். சரி அதனையே சொல்லிவிடலாம் என்று எழுதினேன். அதாவது உலகத்திற்க்காக நாம் உதவி வேண்டுமானால் செய்யலாம் பிராத்தனை செய்யகூடாது.

ஒவ்வொரு வேலையையும் இவன் தான் செய்யவேண்டும் என்று ஒரு விதி இருக்கின்றது. மரவேலை செய்பவன் மரவேலையை தான் செய்யவேண்டும். மண் வேலை செய்பவன் மண் வேலையை தான் செய்யவேண்டும் இது மாறி வேலை செய்தால் வேலை குழப்பம் ஏற்பட்டுவிடும்.

ஆன்மீகவாதிகள் வேண்டுமானால் பிறர்க்காகவும் உலக மக்களுக்காகவும் பிராத்தனை செய்யலாம். ஒரு குடும்பத்தில் இருப்பவர் அடுத்தவர்களுக்கு பிராத்தனை செய்தால் அவனின் குடும்பம் கெட்டுவிடும்.

நீங்கள் வேண்டுமானால் பிறர்க்காக பிராத்தனை செய்து பாருங்கள் உங்களுக்கு அடுக்கடுக்காக பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். உங்களின் வாழ்க்கையில் நீங்கள் சைன் ஆக முடியாது. உங்களுக்காக மட்டும் பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: