வணக்கம்!
வீடுதேடி வரும் அங்காடியை அதட்டகூடாது பிச்சைக்காரன் கால் பின்பக்கம் போககூடாது என்று பழமொழி சொல்லுவார்கள். அதாவது வீடு தேடி வந்து விற்பனை செய்யும் நபர்களை அதட்டி வீண் வம்பு இழுக்ககூடாது. உங்களின் வீட்டுக்கு வந்து பிச்சை எடுக்கும் பிச்சைக்காரனை பார்த்து என்னிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடகூடாது அதாவது இல்லை என்று பின்காலை அவர் வைத்துவிடகூடாது என்பார்கள். இது இரண்டும் கடைபிடித்து வந்தால் அவர்கள் நல்லமுறையில் வாழ்வார்கள்.
ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் எப்படி வேலை செய்யவேண்டும் என்றால் சமதளத்தில் இருந்து வேலை செய்வது போல் இருக்கவேண்டும். சமதளம் என்றால் நன்மையும் இல்லாமல் தீமையும் இல்லாமல் நடுவில் இருந்து இரண்டையும் கொடுத்துக்கொண்டு இருந்தால் நல்லது. பெரிய அளவில் தீமையை கொடுத்தாலும் பிரச்சினை.பெரிய அளவில் நன்மை செய்தாலும் பிரச்சினை.
சமஅளவில் கொடுக்கும்பொழுது உங்களுக்கு எளிதில் அனைத்தும் புரிந்துவிடும். ஒருவன் இரண்டையும் பார்த்துவிட்டால் அவன் ஞானி போல் செயல்பட்டு ஒவ்வொரு நிகழ்வையும் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படுவான்.
ஒவ்வொரு ஜாதகத்திலும் ஒரு கிரகம் தான் இப்படி சமஅளவில் வேலை செய்யும். அந்த கிரகத்தின் காரத்துவம் உடைய வேலையில் மட்டும் ஜாதகன் பொதுவாக வேலை செய்யவான் நிதானம் இருக்கும்.
ஒரு சிலருக்கு புதன் கிரகம் சமஅளவில் இருக்கும். அவர்களை பார்த்தால் புத்தி சரியாக வேலை செய்து சமஅளவில் அனைத்தையும் செய்வார்கள். புத்தியை வைத்து பல நல்ல விசயத்தை செய்வார்கள். அவர்கள் எடுக்கும் முடிவால் அடுத்தவர்களுக்கு எந்தவித பிரச்சினை ஏற்பாடாது.
ஏன் இதனை சொல்லுகிறேன் என்றால் ஒரு சில விசயத்தில் நடுநிலையில் இருந்து செய்யும்பொழுது அனைத்தும் நன்மையாக முடியும் என்பதால் இதனை சொல்லுகிறேன்.
ஒரு சிலருக்கு சனிக்கிரகம் தீமை செய்வதாக இருக்கும் அவர்களால் அடுத்தவர்களுக்கு அதாவது குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு வீண்பழி விழுவது போல் ஆகிவிடும். அந்த நபரால் குடும்பத்தில் உள்ளவர்கள் அவமானம் படகூடும்.
இதனை நீங்கள் நன்றாக புரிந்துக்கொள்ளவேண்டும் என்றால் ஒரு காரியத்தில் நீங்கள் நடுநிலையில் இருந்தீர்கள் என்றால் எப்படி இருக்கும் என்பதை கிரகத்தோடு ஒப்பிட்டு பாருங்கள். கண்டிப்பாக இதனை புரிந்துக்கொள்ளலாம்.
இன்று அம்மன் பூஜை. அம்மன் பூஜை என்பதால் நன்றாக அம்மனிடம் பிராத்தனை செய்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment