Followers

Thursday, August 18, 2016

குரு


ணக்கம்!
          நமக்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் பிறரை அவமதிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்காது. இன்று உலகமே ஒரு எதிர்பார்ப்போடு தானே சென்று கொண்டு இருக்கின்றது. நல்லது செய்தால் கொண்டாடுவோம் நல்லது செய்யாமல் இருந்தால் நமக்கு அடுத்தவரை பிடிக்காது.

ஒருவர்க்கு குரு கிரகம் நன்றாக இருந்தால் நமது மனநிலை எப்படி இருக்கும் என்றால் நம்மை எதிர்த்தால் கூட அவர்கள் நன்றாக வாழவேண்டும் என்று பிராத்தனை செய்துவிட்டு போவோம். 

உங்களுடைய ஜாதகத்தில் குரு எப்படி இருந்தாலும் சரி இப்படிப்பட்ட மனநிலை உங்களுக்கு இருக்கின்றதா என்று பாருங்கள் அப்படி இருந்தால் குரு கிரகத்தின் முழு ஆசிர்வாதமும் உங்களுக்கு இருக்கின்றது என்று அர்த்தம்.

உங்களுக்கு குரு கிரகத்தின் நல்ல சக்தி கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை பிற மனிதர்களை மதிக்கும் குணத்தை ஏற்படுத்திவிட்டால் போதும் உங்களுக்கு கொஞ்ச நாளில் குரு கிரகத்தின் சக்தி கிடைத்துவிடும்.

தீமை செய்பவரையும் ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் என்பது அவ்வளவு எளிதில் எல்லாம் கிடைத்துவிடாது. பழக்கபட்டு அல்லது அடிப்பட்டு உலகத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கிடைக்கும் அந்த நிலை வந்துவிட்டால் குரு கிரகம் நன்றாக வேலை செய்கிறது என்று எடுத்துக்கொள்ளவேண்டியது தான். அதன் பிறகு நீங்கள் தொட்டது துலங்கும்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: