Followers

Sunday, August 21, 2016

ஜாதகம் சாதகமா


ணக்கம்!
          இன்று நல்ல சுபமுகூர்த்தநாள் அதாவது தேய்பிறையில் உள்ள முகூர்த்தநாள் இதனால் பல திருமணத்திற்க்கு சென்றுவிட்டு வந்தேன். திருமணம் சம்பந்தமாக ஒரு பதிவை தரவேண்டும் என்று இருந்தேன் அது இன்றைய நாளில் கொடுத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும்.

சமீபத்தில் வெளியூர் செல்லும்பொழுது ஒரு நபரை சந்தித்தேன். அவர் ஜாலியாக என்னிடம் கேட்டார். தற்பொழுது உள்ள சூழ்நிலையில் திருமணம் நடைபெறும் தம்பதினர்கள் ஒழுங்காக இருக்கின்றார்களா நீங்கள் பார்க்கும் பொருத்தம் சரியான ஒன்று தான என்று கேட்டார்.

1985 ஆம் ஆண்டுக்கு பிறகு வந்த ஜாதகங்கள் பெரும்பாலும் அதிகபிரச்சினையை கொடுக்க கூடிய ஜாதகங்களாக தான் இருக்கின்றன. ஒவ்வொரு ஆணின் ஜாதகமும் பெண்ணின் ஜாதகமும் சரியில்லை என்று தான் சொல்லவேண்டும்.

கிரகங்கள் செல்லும் நிலை அப்படி இருக்கின்றது. கிரகங்கள் செய்யும் வேலையில் தான் அனைத்தும் இயங்குகின்றன. அப்படி இருக்கும் பொழுது மக்களை குறைகூறுவதற்க்கு ஒன்றும் இல்லை.

ஒரு ஆண் வந்து சோதிடம் பார்த்தால் எனக்கு அமையும் மனைவி நன்றாக அதாவது எல்லாவிதத்திலும் நன்றாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். எல்லாம் எதிர்பார்த்தாலும் அந்த பையன் ஒழுங்காக இருப்பதில்லை அவன் பல விசயத்தில் சறுக்கலாக இருக்கிறான்.

ஒரு பெண் வந்து சோதிடம் பார்த்தாலும் எனக்கு அமையும் பையன் ஒழுங்காக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள். அவளும் ஒழுங்காக இருப்பதில்லை. 

நான் அவர்களின் நடவடிக்கையை கண்காணித்து சொல்லவில்லை ஜாதகத்தின் நிலையை வைத்து சொல்லுகிறேன். ஜாதகத்தின் கிரகங்கள் நிலை அப்படி இருக்கும்பொழுது நாம் யாரை குறைச்சொல்லமுடியும்.

அதிகப்பட்சம் இருவரும் சண்டை போடாமல் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளாமல் இருந்து குடும்பத்தை ஓட்டுவதே பெரிய விசயம் தான்.

ஒரு ஜாதகத்தை ஒரு ஜாதகத்தோடு இணைப்பதற்க்கு குறைந்தது ஆயிரம் ஜாதகத்தையாவது பார்த்து இணைக்கவேண்டும். இதனை எல்லாம் பார்பதற்க்கு இந்த காலத்தில் பொறுமை இருக்குமா இதனை எல்லாம் நாங்கள் அனுசரித்து தான் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

கிரகநிலை எப்படி இருந்தாலும் சரி கடவுளிடம் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள் என்று அனைவரிடமும் சொல்லுவது உண்டு. கடவுள் துணை மட்டும் தான் தற்பொழுது அனைவருக்கும் தேவை என்று சொல்லிவிடுவது உண்டு.

ஜாதகத்தை முழுமையாக அலசி ஆராய்ந்து சொல்லுவது உண்டு. இதனை பார்த்து நீங்கள் வரனை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் என்று சொல்லுவேன். அதனை தேர்ந்தெடுப்பார்கள் என்று சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: