வணக்கம்!
நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு ஹோமம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை நான் ஹோமம் செய்யும்பொழுது அம்மன் பல தோற்றங்களை கொடுத்தது. அதனை ஆன்மீக அனுபவங்கள் படிக்கும் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துக்கொண்டேன்.
அம்மன் ஹோமம் செய்ய பல நண்பர்கள் என்னை அணுகுவார்கள். அவர் அவர்களின் இல்லத்திற்க்கு அல்லது என்னுடைய வீட்டிலேயே இதனை செய்துக்கொடுப்பது உண்டு.
அம்மனை வைத்து செய்யப்படுகின்ற ஹோமம் என்பது மிகசிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் வாழ்வில் இதனை செய்ய சொல்லுவேன் அதற்கு காரணம் அதன் வழியாக பல மாற்றங்களை உங்களின் வாழ்வில் பெறமுடியும்.
கொஞ்ச கொஞ்சமாக வாழ்வில் பல மாற்றங்களை உங்களின் வாழ்வில் அனுபவபூர்வமாக உணரலாம். ஒவ்வொரு முன்னேற்றம் அடைந்தவர்களின் வாழ்விலும் இப்படிப்பட்ட பூஜைகள் இருக்கின்றன.
இன்றைக்கு பல இலவச சேவைகளை வழங்குவதற்க்கு பல பணக்காரர்கள் எனக்கு உதவுகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்வில் எல்லாம் இப்படிப்பட்ட ஹோமம் இருக்கின்றது என்பது மட்டும் உண்மையான ஒரு நிகழ்வு.
என்னிடம் சோதிடம் பார்க்கும் நண்பர்கள் அனைவரும் நான் சொல்லும் பலன் உங்களுக்கு நடந்தால் அதன் பிறகு இப்படிப்பட்ட ஹோமம் வேண்டும் என்பதை நீங்கள் கேட்டு என்னிடம் பெற்றுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment