வணக்கம்!
சனிக்கிரகத்தின் பார்வை அல்லது சனிக்கிரகத்தோடு தொடர்புக்கொண்டு சந்திரன் மட்டும் ஒருவரின் ஜாதகத்தில் மட்டும் இருந்தால் அவருக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வாழ்வில் ஏற்படும்.
சந்திரன் மனதுக்காரகன் என்பதால் சனியின் பார்வை படும்பொழுது மனது ரீதியாக அதிக பிரச்சினையை சந்திக்கவேண்டும். அதனாலே அவர்களின் வாழ்வில் அர்த்தமற்ற பிரச்சினை எல்லாம் கிளம்பி அவர்களின் வாழ்க்கையை பாழ் ஆக்கிவிடும்.
மனிதனுக்கு ஏற்படும் பாதிப்பு முக்கால்வாசி அவனின் மனதில் வழியாக தானே ஏற்படுகிறது. மனதை காட்டும் கிரகம் சந்திரன் கொஞ்சம் நன்றாக இருந்தால் தானே நல்லது. சந்திரன் சனியோடு கூட்டு சேரும்பொழுது அதிகபடியாக மணவாழ்வில் பிரச்சினை ஏற்பட்டுவிடும்.
நிறைய விவகாரத்துக்கள் நடைபெறுவது சந்திரன் மற்றும் சனி சேர்க்கை ஜாதகர்களுக்கு அதிகம் நடைபெறும்.உங்களுக்கு சனி மற்றும் சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் எல்லா விதத்திலும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். கொஞ்சம் பொறுமையாக எல்லாவிதத்திலும் இருங்கள்.
ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அவ்வப்பொழுது என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். அதோடு சனி மற்றும் சந்திரனுக்கு அனுமன் வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment