Followers

Wednesday, August 24, 2016

ஜாதகம் சாதகமாக


ணக்கம்!
          பல நண்பர்கள் என்னிடம் சோதிடம் பார்க்கும்பொழுது சொல்லும் விசயம் எப்படியும் நான் முன்னேற்றம் அடைந்துவிடவேண்டும் சார் அதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்பார்கள்.

கண்டிப்பாக ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடையவேண்டும் என்று தான் விரும்புகிறேன் அதில் என்ன ஒரு சிக்கல் என்றால் ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டு அதில் முன்னேற்றம் அடையவேண்டும் என்பதில் தான் ஒரு சிக்கல் இருக்கின்றது. 

ஒரு அலுவலகத்தில் வேலை பார்த்தால் அதில் முன்னேற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக இருக்கும். வருடத்திற்க்கு ஐநூறு ரூபாய் சம்பளத்தை ஏற்றுவதே பெரிய விசயம். இதில் எப்படி முன்னேற்றம் இருக்கும்?

உங்களை வேலை பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அந்த வேலையில் இருந்துக்கொண்டு பிற வேலையை தேர்ந்தெடுத்து செய்தால் லாபம் வருமா என்று பார்க்கவேண்டும். அப்படி செய்யமுடியாது என்றால் அதே வேலையில் எப்படி கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்று பார்க்கவேண்டும்.

ஒரு வேலையை பார்த்துக்கொண்டே அடுத்த வழியில் ஏதாவது சம்பாதிக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு அந்த தொழிலை செய்யவேண்டும். இதனை எல்லாம் செய்தால் தான் ஏதாவது முன்னேற்றம் இருக்கும்.

ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு முன்னேற்றம் அடையவேண்டும் என்றால் தமிழ்நாட்டில் லாட்டரியும் கிடையாது. வருமானத்தை நோக்கிக்கொண்டு அதில் இருந்து முன்னேற்றம் அடையவேண்டும் என்று கேட்டால் அதற்கு வழி கண்டிப்பாக சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: