Followers

Sunday, August 28, 2016

கிழமை


ணக்கம்!
          என்னிடம் ஏதோ ஒரு ஹோமம் அல்லது பூஜைகள் செய்யவேண்டியதாக இருந்தால் ஒரு சிலர் பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்ய சொல்லுவார்கள். இன்று ஒருத்தர் ஹோமம் செய்வதற்காக இருந்தால் அதாவது ஞாயிற்றுக்கிழமை அன்று எனக்கு பிரம்மமுகூர்த்தத்தில் செய்துக்கொடுங்கள் என்று கேட்பார்கள்.

பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்வது நல்லது அதே நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை என்று காலை பிரம்மமுகூர்த்த நேரத்தில் செய்தால் அது சனிக்கிழமை கணக்காக சென்றுவிடும். சனிக்கிழமை செய்த பலன் கிடைக்கும்.

உலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்மமுகூர்த்ததில் நடைபெறும் அனைத்து விஷேசமும் சனிக்கிழமை நடந்துள்ளது. நமது வழக்கப்படி ஒரு கிழமை என்பது ஆறு மணிக்கு மேல் தான் பிறக்கும்.

நமது வழக்கப்படி செய்வது தான் நல்லது. பொதுவாக அன்றேய கிழமையின் ஓரை கூட காலை ஆறு மணிக்கு தான் தொடங்கும் அதனால் காலையில் ஆறு மணிக்கு மேல் நீங்கள் எந்த ஒரு நல்லதையும் செய்யலாம்.

ஆறு மணிக்கு மேல் நல்ல நேரம் பார்த்துக்கூட நீங்கள் செய்துக்கொள்ளலாம். பிரம்மமுகூர்த்தமும் நல்லது தான் அதே நேரத்தில் அந்தந்த கிழமையின் ஓரை முக்கியபங்கு வகிக்கும் என்பதால் இப்படி செய்யுங்கள் என்று சொல்லுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: