Followers

Monday, August 8, 2016

நுண்ணறிவு சொல்லும் பலன்


வணக்கம்!
          சோதிடம் என்பது நம்மை சுற்றி நடக்கும் ஒரு சில விசயத்தையும் செய்து பலனை சொல்லும்பொழுது அது கண்டிப்பாக நன்றாக பலிக்கும். அதாவது கொஞ்சம் பிரசன்னம் பார்த்தும் சொல்லும்பொழுது கண்டிப்பாக நாம் சொல்லுகின்ற பலன் கண்டிப்பாக நடந்துவிடும்.

கிராமபுறங்களில் இருந்து சொல்லுகின்ற பலனுக்கு கூடுதல் பலன் கிடைக்கும் எனது நம்பிக்கை. நகர்புறத்தில் இருந்து சொல்லுவதை விட இது அதிகம் பலிக்கும். இயற்கையான ஒரு விசயத்தை இயற்கையோடு இருந்து சொல்லும்பொழுது நல்ல பலன் கிடைக்கும்.

கிராமபுறங்களில் விடியற்காலை எழுவதற்க்கு கோழியை பயன்படுத்திக்கொள்வார்கள். ஒரு வித சேவல் இரவு இரண்டரை மணிக்கு கூவும். இதனை பயன்படுத்தி வெளியூரில் ஏதாவது ஒரு வேலை இருந்தால் அதுவும் தொலைவுதூர வேலை இருந்தால் இந்த நேரத்தில் கிளம்பி செல்வார்கள். இதனை சாமகோழி என்பார்கள். சாமகோழி கூவும்பொழுது எழுந்து சென்றேன் என்பார்கள்.

தலைசேவல் என்ற ஒன்று இருக்கின்றது. விடியற்காலை சரியாக மூன்று மணிக்கு கூவும். அதன் பிறகு நான்கு மணிக்கு சரியாக கூவும். அதன் பிறகு ஐந்து மணிக்கு அதிகமாக கூவ ஆரம்பித்துவிடும். இதனை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு அந்த காலத்தில் மணியை கண்டுபிடித்து சென்று இருக்கின்றார்கள்.

மணிக்கு கூட இயற்கையை பயன்படுத்திக்கொண்டு எழுந்து வேலை செய்து இருக்கின்றார்கள். தற்பொழுது கையில் செல்போனை வைத்து அதில் மணியை வைத்தாலும் எழுந்திருப்பது கிடையாது. தற்பொழுதும் சேவல் இப்படி தான் கூவிக்கொண்டு இருக்கின்றது. அதனை எல்லாம் கவனிப்பது கிடையாது.

எங்களின் வீட்டில் சேவல் இருக்கின்றது. அது சரியாக கூவும் அப்பொழுது செல்போனை மணியை பார்த்தால் நான் சொன்ன மணிக்கு கூவும். சேவலை அடைக்கும் கூடையில் அல்லது அதற்குள்ள கூண்டை பார்த்தால் நான் இதில் இருந்து ஒன்றை கண்டுக்கொள்ளலாம். இதற்க்கு எப்படி மணியை தெரிவிக்க இறைவன் வைத்தான் என்பது புரியும்.

சேவலுக்கு உள்ள மூக்கு தூங்கும்பொழுது கூட அது தரையில் வைத்து தான் தூங்கும். மூக்கு தரையில் வைத்து தூங்கிக்கொண்டு இருக்கும். பூமி இயங்கும் சக்தி அதற்க்கு தெரியும். பூமியின் வழியாக தான் அதற்க்கு மணி தெரிகிறது. 

நான் பூமியில் இருந்தாலும் பூமி சொல்லும் பாடத்தை எல்லாம் விலகி பல தூரம் சென்றுவிட்டோம். அதனால் தான் நமக்கு இதனைப்பற்றி எல்லாம் அறிவு இல்லாமல் சென்றுவிட்டது. என்னை சந்திக்க வரும் நபர்கள் அல்லது நான் செல்லும் இடங்களில் அதாவது வீடுகளில் உள்ள பூமியின் நான் நிற்க்கும்பொழுது எனக்கு பல விசங்கள் வந்தவரைப்பற்றி தெரியும். பூமியை நோக்கி வீசம் கிரகத்தின் தாக்கத்தை நம்மை சந்திக்கும் வரும் நபர்களை பார்க்கும்பொழுது பூமி நமக்கு தெரிவித்துவிடும். 

ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் மட்டும் பலன் கூட இதனை அறிந்தும் நாம் பலன் சொன்னால் சரியாக இருக்கும். நம்மை தேடி வரும் நபர்களுக்கு நல்லதை செய்யமுடியும். இது எல்லாம் பையித்தியம் போல் தோன்றாலும் முதலில் சேவல் கூவதை பாருங்கள் அதன் பிறகு பூமியின் இயக்கத்தை நாம் கவனிக்கும்பொழுது நுண்ணறிவு என்ன என்பது தெரியவரும்.

ஆடி மாத அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தாதவர்கள் செலுத்தி வைக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: