Followers

Wednesday, August 17, 2016

புதன்


ணக்கம்!
          புதன் என்ற ஒரு கிரகம் மட்டும் ஒருவருக்கு நன்றாக இருந்தால் போதும் ஒரளவு அவர்களை அனைத்தையும் புரிந்துக்கொண்டு வாழ்வதற்க்கு கற்றுக்கொள்வார்கள். என்ன கற்றுக்கொள்வார்கள் என்றால் எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்துவிடுவார்கள்.

புதன் என்ற ஒரு கிரகம் பெரும்பாலும் சோதிடர்களுக்கு மற்றும் உங்களுக்கு எல்லாம் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் அதற்கு காரணம் இப்படிப்பட்ட விசயத்தை படிக்கவேண்டும் என்றால் புதன் தேவைப்படுவார்.

பெரும்பாலும் நம்மிடம் சோதிடம் பார்ப்பவர்களுக்கு அனைவருக்கும் புதன் கிரகம் நன்றாக இருக்கும். நீங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள். முன்னேற்றம் அடையவில்லை என்றாலும் பரவாயில்லை கொஞ்ச நாளில் வாழ்க்கையில் சைன் ஆகிவிடலாம். அதற்குள் உங்களுக்கு புதன் கிரகம் நன்றாக வேலை செய்துவிடும்.

புதன் கிரகம் அதிகப்பட்சம் சூரியனோடு இருக்கும் அப்படி இருப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான். கொஞ்சம் அதிக அறிவை கொடுக்கும். நுட்பமான அறிவை கொடுக்கும். 

நமக்கு அறிவு குறைவாக இருந்தால் நாம் செய்யவேண்டியது உங்களின் குலதெய்வத்திற்க்கு புதன் கிரகத்திற்க்கு அன்று வழிபாட்டை மேற்க்கொள்ளவேண்டும்.

இன்று நெய்வேலி செல்கிறேன். நெய்வேலியில் இன்று சந்திக்கலாம். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: