வணக்கம்!
செவ்வாய் கிரகத்தைப்பற்றி நாம் இப்பதிவில் பார்க்கலாம். சோதிடத்தை பார்ப்பதே செவ்வாய் இருக்கின்றனவா என்று தானே ஜாதகத்தை கையில் எடுப்பார்கள். மக்களின் மத்தியில் மிகுந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது செவ்வாய் தோஷம் என்று சொல்லலாம்.
இன்றைய காலத்தில் செவ்வாய் தோஷத்திற்க்கு எல்லாம் அந்தளவுக்கு கவலைப்படுவதில்லை என்று நினைக்கிறேன். மக்களிடம் கொஞ்சம் தெளிவு இருக்கின்றது என்று தான் சொல்லவேண்டும்.
இந்த காலத்தில் செவ்வாய்தோஷத்திற்க்கு அதிகம் பயப்படுவதில்லை என்று சொல்லுவது எதற்க்கு என்றால் நம்ம ஆளுங்க அதிகம் காதல் திருமணம் செய்கிறார்கள். அதோடு மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள பெரியவர்களும் ஜாதகத்தை எடுத்துக்கொண்டு செல்வதும் குறைகிறது.
திருமணம் முடிந்தவுடன் எப்படியும் தனிக்குடித்தனம் போய்விடுவார்கள். தனியாக தானே இருக்கபோகின்றார்கள் நமக்கும் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்று நினைப்பதால் தான்.
தனிக்குடித்தனம் செல்லும் தம்பதினர்களிடம் இந்த செவ்வாய்தோஷம் கடுமையாக வேலை செய்துவிடும். அதாவது இருவருக்குள்ளும் கடுமையான சண்டை சச்சரவுகளை உருவாக்கி அது முற்றிவிடும். விவகாரத்து வரை செல்ல வைப்பது செவ்வாய் தோஷத்தால் நடக்கிறது.
செவ்வாய் தோஷம் இருந்தால் இருவரையும் செவ்வாய்கிழமை விரதம் இருக்க சொல்லுங்கள். பொறுமையாக இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள். அதோடு அவர்களை தனிக்குடித்தனம் செல்ல சொல்லாதீர்கள்.
காதல் கல்யாணத்தில் இது வேலை செய்யவில்லையா என்று கேட்காதீர்கள். அங்கும் இது நடக்கிறது. காதல் திருமணம் செய்ய வைப்பதே செவ்வாய் தோஷம் தான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment