வணக்கம்!
இன்றைய காலத்தில் பல பேருக்கு நல்ல கிரகங்கள் அமைந்தும் அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் சரியாக அமையாத காரணத்தால் அவர்களின் வாழ்க்கை வீணாக போய்விட்டது.
ஒரு வேலைக்கு நீங்கள் மனு செய்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த வேலை உங்களுக்கு கிடைக்கும் ஆனால் நீங்கள் அதற்கு போக விருப்பம் இல்லை என்று சொல்லுவீர்கள். இதற்கு காரணம் பித்ருதோஷம் இல்லை உங்களின் ஜாதகத்தில் சந்திரன் அடிவாங்கியுள்ளது என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
என்னிடம் பல பெற்றோர்கள் அவர்களின் மகன் அல்லது மகளின் ஜாதகத்தை காட்டி இந்த தொழிலுக்கு போவர்களா என்று கேட்பார்கள். நான் தொழிலுக்குரிய காரகத்தை மட்டும் கணித்து பலனை சொல்லி கண்டிப்பாக போவார்கள் என்று சொல்லிவிடுவேன்.
கொஞ்சநாளில் சம்பந்தப்பட்ட ஜாதகர்கள் என்னிடம் வந்து சார் அவன் செல்லமாட்டேன் என்று சொல்லுகிறான் என்பார்கள். நானும் என்னடா என்று பார்த்தால் அவர்களின் ஜாதகத்தில் சந்திரன் அடிவாங்கியுள்ளது தெரிகிறது.
மனிதனுக்கு மனசு தானே பெரிய விசயம். எத்தனையோ துறவிகளை உருவாக்கியது மனசு தானே. எத்தனையோ மனிதர்கள் தற்கொலை செய்துக்கொள்வது எல்லாம் மனசால் வந்தது தானே.
உங்களின் ஜாதகத்திலும் சந்திரன் எப்படி இருக்கின்றது என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். சந்திரன் நன்றாக இருந்தால் பிரச்சினை இல்லை சந்திரன் சரியில்லை என்றால் நீங்கள் சந்திரனுக்கு உரிய பரிகாரத்தை மேற்க்கொள்ளுங்கள்.
ஜாதக கதம்பத்தில் வந்த எத்தனையோ பேரை நல்லவழி காட்டியது சந்திரனை வைத்து தான். அதாவது ஒவ்வொருவரின் மனநிலையும் எதையும் தாக்கும் சக்தி வாய்ந்ததாக மாற்றி அவர்களை மேலே கொண்டு வந்து இருக்கிறேன். அதற்கு எல்லாம் எனக்கு பயன்பட்ட கிரகம் சந்திரன் மட்டுமே.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment