வணக்கம்!
இந்த வருடம் ஆடி மாதம் முழுவதும் நிறைய ஹோமங்கள் அம்மனுக்கு செய்கின்ற வாய்ப்பு கிடைத்தது. அந்த புண்ணியத்திற்க்கு எல்லாம் நமது நண்பர்கள் தான் காரணம் அவர்கள் கொடுத்த பணத்தில் இதனை எல்லாம் செய்யமுடிந்தது.
அம்மன் ஹோமத்தை செய்ய பல நண்பர்கள் ஆர்வம் காட்டினார்கள் ஆனால் அவர்களின் பொருளாதார நிலை தடை செய்தது என்று சொல்லலாம். அவர்களின் கர்மா அப்படி வேலை செய்கிறது என்று விட்டுவிடலாம்.
ஆடி மாதம் ஒவ்வொரு குலதெய்வம் மற்றும் வீட்டுதெய்வத்திற்க்கும் படையல் போடுவார்கள். இது எல்லா ஊர்களிலும் நல்ல விஷேசமாக நடக்கும். இதுவரை ஆடி படையல் உங்களின் வீட்டில் செய்யாமல் இருந்தால் உடனே அதனை செய்துவிடுங்கள். ஆடி படையல் என்பது வெள்ளிக்கிழமை தான் செய்யவேண்டும் என்பது கிடையாது ஆடி மாதத்தில் எந்த நாளிலும் செய்யலாம்.
ஆடி மாதம் அம்மன் பூஜையில் கலந்துக்கொண்டவர்கள் பெரும்பாலும் எனக்கு தெரிந்த நண்பர்கள் தான் இந்த தளத்தில் அதிக நண்பர்கள் படிக்கிறார்கள் என்பது தெரியும் அனைவரும் இதில் கலந்துக்கொள்ள அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
பொதுவாக பணம் நம்மிடம் இருக்கும்பொழுது தான் ஆன்மீக காரியங்கள் அதிகம் செய்து நாம் பெரிய செல்வந்தர் ஆகலாம். உங்களின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டு அதிபதி யார் என்று பாருங்கள். அவருக்கு அல்லது அவர் செல்லும் நட்சத்திரத்திற்க்கு நீங்கள் ஒரு பரிகாரம் செய்யலாம். சரி பரிகாரம் எல்லாம் செய்யவேண்டாம் என்றால் அந்த நாளில் அவருக்கு ஒரு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வாருங்கள்.
பொதுவாக செல்வவளத்திற்க்கு நீங்கள் லட்சுமி பூஜை அல்லது ஏதோ ஒரு பொதுவான பரிகாரத்தை தான் இதுவரை செய்து வந்திருப்பீர்கள். உங்களின் ஜாதகத்திற்க்கு தகுந்தவாறு செய்து இருக்கமாட்டீர்கள் அதனால் உங்களின் ஜாதகத்தை எடுத்து அதற்கு செய்யுங்கள். கண்டிப்பாக உங்களுக்கு பணம் வரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment