வணக்கம்!
குரு கிரகத்தின் நன்மையை நாம் பெறவிட்டாலும் சுக்கிரகிரகத்தின் நன்மையாவது நாம் அதிகம் பெறவேண்டும் அப்படி பெற்றால் தான் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும். இரண்டு குருவில் ஒரு குருவின் சக்தியாவது நாம் கட்டாயம் பெறவேண்டும் அப்படி பெற்றுவிட்டால் போதும் நல்லபடியாக அனைத்தையும் பெற்றுவிடலாம்.
சுக்கிரனின் காரத்துவத்தில் நம்மிடம் முதலில் இருப்பது அதாவது சுக்கிரனின் அம்சமாக இருப்பது அவர் அவர்களின் மனைவி தான். உங்களின் மனைவி சுக்கிரனின் அம்சம். பல பேர் இதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ஆனால் உண்மை இது தான்.
சுக்கிரனின் காரத்துவத்தை நீங்கள் பெறுவதற்க்கு உங்களின் மனைவியை சந்தோஷமாக வைத்திருந்தாலே போதும் உங்களுக்கு சுக்கிரபலன் அதிகம் கிடைக்கும்.
உங்களின் மனைவி மனம் நோகாமல் இருந்தாலே போதும் உங்களின் மனைவியின் பார்வை உங்களின் மேல் தான் இருக்கும். உங்களின் மனைவியின் வழியாக சுக்கிரனின் பார்வை உங்களின் மீது படும்.
பழைய காலத்தில் எல்லாம் சும்மா இதனை சொல்லவில்லை நூறு சதவீதம் இது உண்மை என்பது போக போக நீங்களே அனுபவத்தில் உணர்ந்துக்கொள்ளமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment