வணக்கம்!
செவ்வாய் கிரகம் ஒரு ஜாதகத்தில் நன்றாக இருக்கும்பட்சத்தில் அவர்கள் வாழ்க்கையில் அனைத்திலும் தைரியமாக எதிர்க்கொண்டு செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவார்கள்.
பெரிய அளவில் சம்பாதிப்பவர்கள் மற்றும் பெரிய தொழில் செய்பவர்களுக்கு எல்லாம் செவ்வாய் காரகன் ஜாதகத்தில் சாதகமான ஒரு நிலையில் இருப்பார். செவ்வாய்காரகன் நன்றாக இருந்தால் தைரியம் என்பது நிறைய கிடைக்கும். அந்த தைரியத்தை வைத்தே சாதிக்கமுடியும்.
பொதுவாக அனைவருக்கும் செவ்வாய்கிரகம் நன்றாக இருக்கவேண்டும் என்று நான் பலமுறை சொல்லிருக்கிறேன். செவ்வாய்கிரகம் நன்றாக இருக்கும்பொழுது தான் ஒருவருக்கு வாரிசு என்பது உருவாகும்.
தமிழ்நாட்டில் அனைவரும் பழனி முருகன் கோவில் சென்று வருடம் ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வருவார்கள். அதுபோல நீங்களும் ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.
ஒரு சிலருக்கு செவ்வாய் கிரகம் நீசமாக இருக்கும். அதாவது கடகத்தில் இருக்கும். நீசமாக இருக்கின்றது என்று நீங்கள் கவலைபடதேவையில்லை செவ்வாய்கிழமை அன்று விரதம் இருந்து வந்தால் நல்லது.
கடகராசியில் செவ்வாய் இருந்தால் அவர்களுக்கு அமையும் நிலம் பெரும்பாலும் தண்ணீர் சம்பந்தப்பட்ட பகுதியில் அமையும். ஏன் வீடு கூட அப்படி தான் அமையும்.
செவ்வாய்காரகன் உங்களின் ஜாதகத்தில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. செவ்வாய் கிரகம் உங்களுக்கு நல்லது செய்யவேண்டுமானால் கட்டடம் கட்டுவதற்க்கு உங்களின் பங்களிப்பு இருந்தால் நன்றாக இருக்கும்.
கோவில் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட இடத்திற்க்கு கட்டடம் கட்டுவதற்க்கு தேவையான பொருட்களை அல்லது பணமாக நீங்கள் கொடுத்தால் போதும் உங்களுக்கு செவ்வாய் கிரகம் நல்லதை கொடுக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment