வணக்கம்!
வேலைக்கு செல்லுபவர்கள் தன்னுடைய வேலையை தவிர வேறு ஏதாவது ஒரு வேலையையும் தேர்ந்தெடுத்து செய்யுங்கள் என்று சொல்லிருந்தேன். ஒரு வேலையில் இருந்தால் சம்பாதிப்பது போதாது என்பதால் இதனை சொல்லிருந்தேன்.
பல நண்பர்கள் இதற்காக என்னை தொடர்புக்கொண்டு கேட்டார்கள். ஒரு சில பிறமாநிலத்தில இருப்பவர்கள் லாட்டரி வாங்கலாமா என்று கேட்டார்கள். ஒரு சிலர் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடலாமா என்று கேட்டார்கள். பெரும்பாலும் நம்ம ஆட்கள் கேம்பிளிங் சம்பந்தப்பட்டவாறு அவர்களின் எண்ணமும் இருந்தது.
கையில் பணம் போதிய அளவு இல்லை என்றால் மனிதர்களின் குணம் இதனை சம்பந்தப்பட்டவாறு உள்ள விசயத்தில் ஈடுபாடு காட்டும். பொதுவாகவே இப்படிப்பட்ட விசயத்தில் பணத்தை விடுபவர்கள் அதிகம் பேர் யார் என்று பார்த்தால் நடுத்தரவர்க்கத்தில் உள்ளபவர்களாகவே இருப்பார்கள்.
கையில் பணம் நிறைய இருக்கும்பொழுது தான் இது சம்பந்தப்பட்ட விசயம் அதிகளவில் நமக்கு லாபகரமாக அமையும். வறுமையில் இருப்பவர்களுக்கு போதிய பணம் இல்லாதவர்களுக்கு இது சரிபட்டுவராது என்பது தான் என்னுடைய கருத்தாக இருக்கின்றது.
என்னை பொறுத்தவரை அனைவரும் நல்லவாழ்க்கை வாழவேண்டும் அதற்கு என்னால் முடிந்தளவு அவர்களுக்கு உதவவேண்டும் என்று தான் நினைப்பேன். மேலே சொன்ன விசயத்தை தவிர வேறு ஏதாவது ஒரு நல்ல தொழில் செய்யமுடியுமா என்பதை யோசித்து செயல்படுங்கள்.
புதன்கிழமை அன்று தான் நான் வழிபாடு நிறைய செய்யுங்கள் என்று சொல்லுவது உண்டு. நிறைய அறிவை நாம் பெறும்பொழுது யாருக்கும் தெரியாத ஒரு தொழிலை நாம் கண்டுபிடித்து அதனை செய்து அந்த வழியில் நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.
புதன்கிரகம் நல்ல புத்தியை கொடுக்ககூடிய கிரகம். புதன் கிரகம் நமக்கு நன்றாக இருக்கும்பொழுது நாம் எதையாவது ஒன்றை துருவி கண்டுபிடித்து விடுவோம். அதனை வைத்து நாம் முன்னேற்றம் அடைந்துவிடலாம்.
புதன்கிரகம் பெரும்பாலும் அனைவருக்கும் சூரியனோடு சேர்ந்து இருக்கும். நல்ல புத்தியை இது கொடுக்கிறது. ஒரு சிலருக்கு இது செயல்படுவதும் இல்லை. புதன்கிரகம் தனக்கு சரியில்லை என்று நினைப்பவர்கள் அருகில் உள்ள சிவ ஸ்தலத்தில் நவகிரகத்தில் உள்ள புதனுக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு ஒன்பது வாரத்திற்க்கு தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். புதன் நன்றாக செயல்படும்.
புதன்கிரகத்தை வழிபட்டு வந்த பிறகு உங்களின் மனம் நிறைய செய்திகளை சேகரிக்க தொடங்கும். நல்ல புத்தியை வளர்க தொடங்கும். அனுபவத்தில் நல்ல மாற்றத்தை பலருக்கு இது கொடுக்கிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment