வணக்கம்!
மாந்தி ஆறில் நின்றால் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள். ஆறாம் இடத்தில் எந்த தீயகிரங்கள் நின்றாலும் அது அவர்களை நன்றாக சாப்பிடவைக்கும். உடல்வாகு அதிகபடியாக இருப்பதற்க்கு வழி செய்யும்.
ஒருத்தரை பார்த்தாலே அவர்கள் மிரட்டியே காரியத்தை சாதித்துவிடுவார் என்று சொல்லுகின்றார்கள் அல்லவா. அவர்களுக்கு எல்லாம் சாப்பாடு நன்றாக இருக்கவேண்டும்.
ஒருவர் நன்றாக சாப்பிடவேண்டும் என்றால் அதற்கு அவர்களின் ஜீரணஉறுப்பு நன்றாக இருக்கவேண்டும். ஜீரணஉறுப்பு நன்றாக வேலை செய்ய ஆறாம் இடம் வலுத்தால் நன்றாக வேலை செய்யும்.
ஆறாம் இடத்தில் மாந்தி நின்றால் அவர்களுக்கு ஜீரணஉறுப்பு நன்றாக வேலை செய்யும். எதிலும் தைரியத்தை உருவாக்கி தன்னுடைய வேலையை தானே திறமையாக செய்யும் வாய்ப்பை உருவாக்குவதில் ஆறில் நிற்க்கும் மாந்திக்கு நிகர் கிடையாது என்று சொல்லலாம்.
மாந்தி ஆறில் நின்றாலே தந்தை நல்ல நிலைக்கு வந்துவிடுவார். இவர் பிறந்த நேரம் அவர்களுக்கு நல்லதை மாந்தி கொடுத்து ஒரு நல்ல நிலைக்கு வந்துவிடுகின்றார்கள். இவரை பணக்காரர்களாக மாற்ற அவர்களின் பெற்றோர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment