Followers

Friday, May 26, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
         மாந்தி பனிரெண்டில் இருந்தால் உலகத்தில் உள்ள பேய் எல்லாம் உங்களே நோக்கி வருவது போல் ஒரு பிரமை ஏற்படும். ஆவியுலக ஆராய்ச்சிகளை எல்லாம் செய்வார்கள் அல்லவா அவர்களுக்கு எல்லாம் பனிரெண்டில் உள்ள மாந்தி நல்ல வேலையை கொடுக்கும்.

ஒரு வித பயஉணர்வு உங்களிடம் இருந்துக்கொண்டே இருக்கும். பயஉணர்வால் இரவில் வெளியில் செல்லகூட பயப்படுவீர்கள். ஒரு சிலருக்கு கண்களில் பேய் உருவம் தெரிவது போல் இருக்கும். 

பனிரெண்டில் மாந்தி இருப்பவர்களுக்கு ஆயுள் கூட குறைவாக இருப்பதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆயுளுக்காக நீங்கள் தனியாக பரிகாரம் செய்துக்கொள்ளுங்கள். பொதுபரிகாரத்தில் அதனை செய்யமுடியாது என்பதால் சொல்லுகிறேன்.

வாழ்வில் நிறைய ஏமாற்றுங்களை சந்திக்கும் நபர்களாக நீங்கள் இருப்பீர்கள். முடிந்தவரை கடன் வாங்காமல் இருங்கள். கடன் வாங்கினால் தலைமறைவு வாழ்வு தான் வாழவேண்டியிருக்கும். கடன் அடைக்கமுடியாது.

மாந்தி உங்களை அதிக காலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை செய்ய வைத்துவிடுவார். மருத்துவமனைக்கு அடிக்கடியும் செல்ல வைப்பார். மாந்தி பனிரெண்டாவது வீட்டில் இருப்பது அந்தளவுக்கு நல்லதல்ல என்பதையும் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: