வணக்கம்!
மாந்தி பத்தாவது வீட்டில் இருந்தால் நல்லது என்று பொதுவாக சொல்லிவிடலாம். பத்தாவது வீட்டில் மாந்தி இருந்தால் இளமையில் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதையும் சொல்லி தான் ஆகவேண்டும்.
பத்தாவது வீடு கர்மஸ்தானம் என்பதால் இளமையில் கர்மம் செய்யவேண்டிய ஒரு நிலையை மாந்தி உருவாக்கிவிடுவார். அது மட்டும் இல்லை தொழிலை கொடுத்தாலும் அதிலும் சிக்கலை உருவாக்குவதும் உண்டு.
தந்தையின் வருமானத்தை தடுத்து நிறுத்தி இளமையில் வறுமையை சந்திக்க வைப்பது உண்டு. குடும்பத்தில் நிம்மதியையும் சீர்குழைப்பதும் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் சண்டை சச்சரவுக்கு வழி வகுக்கும்.
சம்பந்தப்பட்ட ஜாதகர் அவர் அப்பாவிடம் வாய் வழி திட்டுதலை வாங்கிக்கொண்டு இருப்பார். குடும்பத்தில் அதிகமான உறுப்பினர்கள் இருக்கமாட்டார்கள். ஒரே வாரிசுபோல் இருப்பதற்க்கு வழி உண்டு.
பத்தாவது வீட்டில் மாந்தி இருப்பதால் நடுத்தரவயத்திற்க்கு மேல் நல்ல நிலைக்கு வந்துவிடலாம். சுயமுயற்சியால் வாழ்வில் உயர்ந்த இடத்திற்க்கு செல்லுவதற்க்கு வாய்ப்புகள் உருவாகும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment