வணக்கம்!
நண்பர் KJ அவர்கள் ஒரு கேள்வி கேட்டுருந்தார். தற்பொழுது நேரம் கிடைத்தது அவரின் கேள்விக்கு விடையை கொடுத்துவிடலாம். இதேபோல் நண்பர் கலைராஜனும் இந்த கேள்வியை கேட்டுருந்தார்கள்.
ஒரு சில சித்தர்களின் கோவிலை சொல்லிருந்தார்கள். இதுபோல பல சித்தர்களின் கோவில்களை நீங்கள் சொன்னால் பயன்பெறலாம் என்றும் சொன்னார்கள்.
நம்ம வழக்கப்படி பார்த்தால் ஒன்றை சொல்லுவார்கள். தவறு செய்யாதே சாமி உன்னை அடித்துவிடும் என்று சொல்லுவார்கள். பிற மதங்களில் இதனை கூட கொஞ்சம் தவறாக புரிந்துக்கொண்டு உங்கள் சாமி உங்களை அடித்தால் அது எப்படி சாமியாக இருக்கும் என்று கேட்பார்கள்.
நம்ம வழக்கப்படி சாமி அடிக்கும் என்பது தான் உண்மை. நாம் தவறாக செய்வது அனைத்தும் நம்மை கொல்லும் சக்தி படைத்தது தான். வழிகாட்டிய சித்தர்கள் ஆரம்பிக்கும்பொழுதே பல விசயங்கள் எனக்கு உணர்த்தின. எந்த காரணம் கொண்டும் சித்தர்கள் சொன்ன விசயத்தை தவறாக நாம் சொல்லிவிடகூடாது. சித்தர்கள் சொன்ன ரகசியத்தையும் நாம் கடைபிடிக்கவேண்டும் என்பது தான் அது.
இன்று வரை வழிகாட்டிய சித்தர்களின் பகுதியில் அப்படிப்பட்ட தகவல்களை தான் சொல்லிக்கொண்டு வருகிறேன். சித்தர்களை விடுங்கள் பிரசித்து பெற்ற கோவில்களில் கூட மக்கள் வணங்குவது ஒன்றாக இருக்கும். அங்கு சக்தி இருக்கும் இடம் வேறு இடத்தில் இருக்கும். சக்தி இருக்கும் இடத்தில் பல வருடங்கள் ஆன்மீகத்தில் இருந்தவர்கள் மட்டும் சென்று வணங்குவார்கள். அவர்களுக்கு மட்டும் அது உணர்த்தி இருக்கும்.
சித்தர்களின் கோவில்களை நான் சொல்லுவதை விட மற்றும் தொலைக்காட்சி நெட் போன்றவை சொல்லுவதை விட உங்களின் தேடுதல்களில் அதனை அடையமுடியும். அந்த தேடுதல்கள் தான் உண்மையான சித்தர்களின் கோவில்களாக இருக்கும். மற்றவை அனைத்தும் ஏதோ ஒரு விளம்பரத்திற்க்கு சொல்லப்பட்டவை.
நமக்கு தகுதி இருக்கும்பொழுது நான் சொல்லவேண்டியதில்லை அந்த சித்தர்களே நம்மை நோக்கி வந்து கொடுத்துவிட்டு செல்வார்கள். அது மட்டுமே நான் இந்த நேரத்தில் சொல்லும் வார்த்தை. தகுதியை மட்டும் நாம் வளர்த்துக்கொண்டால் போதும். காலம் வெகுதொலைவில் இல்லை என்பது தான் உண்மை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment