வணக்கம்!
நேற்று பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் எப்படி உடலை சுத்தப்படுத்திக்கொள்வது என்று கேட்டார்கள். பல பதிவுகளில் இதனைப்பற்றி நாம் சொல்லிருக்கிறோம். உங்களுக்காக ஒரு சில கருத்துக்களை மறுமுறை சொல்லுகிறேன்.
உங்களின் உடல் சூட்சமஉடலை சுத்தப்படுத்த பல வழிகள் இருந்தாலும் புனித நீரில் அடிக்கடி நீங்கள் குளிக்கவேண்டும். கடல் மற்றும் புண்ணியதீர்த்தங்களில் நீங்கள் நீராடினால் உங்களின் உடல் புனிதப்படும். அடிக்கடி இதனை நீங்கள் செய்யவேண்டும் என்று மறுபடியும் கேட்டுக்கொள்கிறேன்.
சாமியார்களின் காலில் நீங்கள் விழுந்து வணங்கினால் அவர்கள் உங்களின் பாவத்தை வாங்கிக்கொள்வார்கள். உங்களின் உடல் புனிதமடையும். அடிக்கடி உங்களின் இல்லத்திற்க்கு ஆன்மீகவாதிகளை அழைத்துக்கொண்டு வந்து அவர்களின் பார்வை உங்களின் இல்லத்திற்க்கு கிடைத்தாலும் நல்லது உங்களுக்கு நடக்கும்.
அரவாணிகளிடம் ஆசி வாங்குவது அல்லது அவர்களை விட்டு உங்களுக்கு சுத்திபோடுவது சூட்சமஉடல் பலப்படும். ஒரு சில கோவில்களில் சுத்திபோடுவார்கள் அதனை கூட நீங்கள் செய்துக்கொண்டால் உங்களின் சூட்சமஉடல் பலப்படும்.
அமாவாசை அன்று சுத்தி போடுவார்கள் அல்லவா. உங்களுக்கும் உங்களின் வீட்டிற்க்கும் சுத்தி போட்டுக்கொள்வது உங்களுக்கு நன்மை பயக்கும். அடிக்கடி கடல் நீர் மற்றும் கோமியத்தை கொண்டு உங்களின் வீட்டை சுத்தப்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்களின் வீட்டையும் சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் சொல்லுவதற்க்கு காரணம் நீங்கள் வசிக்கும் வீட்டில் தீயசக்திகள் வசித்துவிட்டால் அது உங்களையும் சேர்த்து நாசப்படுத்தும் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன்.
யோகா தியானம் போன்ற பயிற்சிகளையும் நீங்கள் செய்தால் உங்களின் சூட்சமஉடல் பலப்படும். நல்ல குருவை நாடி அந்த பயிற்சியை மேற்க்கொள்ளலாம். தொடர்ச்சியாக இதனை செய்தால் பலன் கிடைக்கும்.
குரு துரோகம் செய்யகூடாது. நமக்கு ஏதோ ஒரு சின்ன கருத்தை சொல்லிக்கொடுப்பவர்களிடம் கூட நீங்கள் வம்பு பேசிக்கொண்டு இருக்ககூடாது. அந்த சின்ன கருத்தை அவர்கள் சொன்னதால் அவர்களும் உங்களுக்கு குருவே அவர்களை எதிர்க்ககூடாது.
சம்பந்தமே இல்லாமல் பொய்சொல்லிக்கொண்டு இருக்ககூடாது. ஏமாற்றம் செய்யதல் கூடாது. கடன் வாங்கினால் முடிந்தவரை திருப்பிக்கொடுக்க என்ன வழி என்பதை கண்டறியவேண்டும். ஏன் என்றால் அடுத்தவனின் கர்மாவை நாம் சுமக்கவேண்டியிருக்கும். இதனை எல்லாம் செய்தால் உங்களின் சூட்சமஉடல் பலப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment