வணக்கம்!
மாந்தி ஒன்பதில் இருந்தால் அவர்கள் வழிபாடு அதிகப்பட்சம் கிராமதெய்வத்தின் துணையை ஆக தான் இருக்கும். கிராமதேவதை இவர்களுக்கு நிறைய கைகொடுத்து இவர்களை தூக்கி நிறுத்தும். கிராமபுறங்களில் உள்ள கோவிலாக பார்த்து வணங்கினால் சிறப்பு.
ஒரு நபர்க்கு மாந்தி ஒன்பதில் இருந்தது அவர்க்கு அவரின் குலதெய்வத்தை எடுத்து கட்டும் பணியை செய்ய சொல்லிருந்தேன். தற்பொழுது அது முடிவடைந்து நல்ல படியாக ்கும்பாபிஷேகம் முடிந்தது.
பாக்கியஸ்தானத்தில் மாந்தி இருக்கின்றது அதனால் அவர்களால் கோவிலை கட்டமுடியாது என்று பல சோதிடர்கள் அவரிடம் சொல்லிருக்கிறார்கள். நான் அவரின் ஜாதகத்தை பார்த்து உங்களால் தான் இது முடியும் என்று சொல்லி அவரை செய்ய சொல்லிருந்தேன்.
நண்பரும் கடும் முயற்சியை போட்டு அந்த கோவிலை கட்டினார். கோவிலை கட்டும்பொழுது நிறைய சிக்கல் பிரச்சினை வருவது இயல்பான ஒன்று தான். அதனை நீங்கள் பொருட்படுத்தாமல் நீங்கள் கட்டலாம் என்று சொன்னேன். அவரால் தான் அந்த கோவிலை கட்டமுடிந்தது என்று அனைவரும் சொன்னார்கள்.
பாக்கியஸ்தானத்தில் தீயகிரகம் இருக்கின்றது அதனால் அவர்கள் தெய்வ வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள் என்பதை விட அந்த கிரகம் எப்படி வேலை செய்யும் என்பதை பார்த்து பலனை பார்ததால் கண்டிப்பாக நல்லது நடக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment