Followers

Thursday, May 4, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
          மாந்தி நான்கில் நின்றால் உங்களுக்கு வீடு அமையாது. உங்களுக்கு வீடு அமைந்தாலும் அந்த வீடு அந்தளவுக்கு சுபிட்சமாக இருக்காது. ஒரு சிலருக்கு வாடகை வீட்டிலேயே வாழவேண்டிய ஒரு நிலை ஏற்படலாம்.

இன்றைய காலத்தில் ஒரு சாதாரண மனிதனின் பெரிய ஆசையாகவும் கடைசி ஆசையாகவும் இருப்பது ஒரு வீடு தான். ஒரு வீடு கட்டவேண்டும் அல்லது வாங்கவேண்டும் என்று சொல்லுவார்கள். 

பூமியில் வாழும் உயிரினங்களில் இந்த பூமியை முடிந்தளவுக்கு அசிங்கப்படுத்துவது மனிதன் தான். வீடு கட்டி வாழ்கிறேன் என்று பூமியை எந்தளவுக்கு அசிங்கப்படுத்திவிடுகிறோம். ஞான மார்க்கத்தில் இருப்பவர்களுக்கு இது புரியும்.

நாம் சொல்லுவதை சொல்லிவிடுவோம். நான்கில் மாந்தி இருந்தால் அந்த நபர் ஒரு வீடு கட்டவேண்டும் என்று ஆரம்பித்தால் மனையை தோண்டினால் அதில் இருந்து இறந்தவர்களின் உடலில் மண்டை ஒடு அல்லது ஏதாவது ஒரு இறப்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடைக்கலாம்.

வாடகை வீட்டில் இருந்தால் ஏதோ ஆவி நடமாட்டம் போல் இருக்கும். உங்களின் வீட்டில் ஏதோ ஒரு உருவம் வருவது போல் உங்களின் கண்களுக்கு தெரியலாம். 

மேலே சொன்ன அனைத்தும் பொதுப்பலன்கள் ஒவ்வொருவரின் ஜாதகத்திற்க்கு தகுந்தமாதிரி மாறுப்படும். உங்களின் ஜாதகத்தை வைத்து பார்க்கும்பொழுது மட்டுமே உண்மை நிலவரம் தெரியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: