வணக்கம்!
மாந்தி ஐந்தில் நின்றால் என்ன பலன் என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு மாந்தி ஐந்தில் நின்றால் அவருக்கு பூர்வ புண்ணியத்தில் வீடு அமையாது. வெளியூர் சென்று அவர் குடியேரும் நிலை ஏற்படலாம்.
இன்றைய காலத்தில் அதிகப்பட்சம் அனைவரும் கிராமபுறங்களில் இருந்து நகர்புறத்திற்க்கு சென்றுவிடுகிறார்கள். ஏதோ ஒரு காரணத்திற்க்கு சென்றாலும். அவர்களின் ஜாதகத்திலும் பூர்வபுண்ணியம் கெட்டு தான் இருக்கும்.
கிராமத்தில் இருந்து அனைவரும் வெளியேறுவதில்லை ஒரு சிலர் மட்டும் வெளியேறுகிறார்கள். வெளியேறும் நபர்களுக்கு பூர்வுபுண்ணியத்தில் மாந்தி நிற்க்கும். ஒரு சிலருக்கு மாந்தி ஐந்தில் நின்று அவர்கள் சொந்தஊரில் தான் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் பிறந்த வீட்டில் இருந்து அடுத்த இடத்தில் வீடு கட்டியிருப்பார்கள் அல்லது வாடகைக்கு போய்விடுவார்கள்.
மாந்தி ஐந்தில் நிற்கும் ஆட்கள் உள்ளுரிலேயே காலம் தள்ளும் வாய்ப்பு இருந்தால் மேலே சொல்லுவது போல் உங்களின் வீட்டை அமைத்துக்கொண்டு வாழ்ந்தால் உங்களின் வாரிசு நன்றாக இருக்கும்.
மாந்தி ஐந்தில் நின்றால் வாரிசுக்கு தானே பிரச்சினை வரும். ஒரு சிலருக்கு வாரிசு கூட நிலைப்பதில்லை. அதனால் பூர்வபுண்ணியத்திற்க்கு தகுந்தார்போல் உங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் நல்லது நடக்கும்.
மாந்தி ஐந்தில் நிற்கும் நபர்களுக்கு பெரிய அளவில் யோகம் எல்லாம் ஏற்படுவதில்லை. அதிக கவலையோடு வாழும் வாழ்க்கையை தான் அவர்கள் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர். பெயர் சொல்லும் வாழ்க்கை வாழ்வதில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment