வணக்கம்!
நண்பர் ஜீவன்பிரசாத் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார். மாந்திக்கும் கல்விஉதவிக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார்.
மாந்திக்கும் கல்விஉதவிக்கும் சம்பந்தம் இல்லை. ஒரு பரிகாரம் செய்யவேண்டும் என்றால் அது சோதிடனுக்கு தான் போய் சேரவேண்டும். சோதிடனுக்கு வரும் வருமானத்தை சோதிடன் பலருக்கு தானமாகவும் அல்லது கோவிலுக்கும் செய்வான். அதில் ஒரு பங்கை அவன் எடுத்துக்கொள்வான்.
பொதுபரிகாரத்தில் நான் அவர் அவர்களே தானத்தை செய்துவிடுங்கள் என்று சொல்லுகிறேன். அந்த காலகட்டத்திற்க்கு தகுந்தமாதிரி நான் தானத்தை முடிவு செய்து அதனை செய்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு.
ஒரு பரிகாரம் ஆரம்பிக்கும் நேரத்தில் அப்பொழுது என்ன இருக்கிறதோ அதனை நான் செய்வது உண்டு. பொதுபரிகாரத்தில் எனக்கு அனுப்பிய பணத்தில் கூட இதனை செய்து இருக்கிறேன். ஒரு பரிகாரம் செய்தால் கண்டிப்பாக அதற்கு தானம் செய்யப்படவேண்டும் என்பது எனது குருவின் கட்டளை.
ஒரு சில பரிகாரத்தில் லட்சணக்கில் தானம் செய்து அதன்பிறகு பரிகாரத்தை செய்துக்கொடுத்து இருக்கிறோம். உங்களின் சக்திக்கு தகுந்தமாதிரி நீங்கள் தானம் செய்துவிடுங்கள். கல்விஉதவி செய்வது நல்லது என்பதற்க்காக இதனை தற்பொழுது செய்யசொல்லிருக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment