வணக்கம்!
செவ்வாய் ஒரு ஜாதகத்தில் பலன் பெற்றுவிட்டால் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று சொல்லலாம். அதே நேரத்தில் அவர்கள் சாப்பிடாமல் இருந்தாலும் அதாவது பட்டினியாக கிடந்தாலும் நன்றாக அவர்களின் உடல் தாங்கும். பெரிய பிரச்சினை எல்லாம் வராது.
சனியின் ராசியை உடையவர் அல்லது ஜாதகத்தில் சனி பலன் பெற்றவர்கள் எண்ணையில் பொரித்த வகைகளை நன்றாக சாப்பிடுவார்கள். கடையில் உள்ள எண்ணைய் பதார்த்தங்களை சாப்பிட்டால் கூட அவர்களுக்கு ஒன்றும் செய்யாது. அனைத்தையும் அவர்களுக்கு சொரிக்கும்.
சுக்கிரனின் ராசியை உடையவர்கள் அல்லது ஜாதகத்தில் சுக்கிரனின் பலன் பெற்றவர்கள் இனிப்பு பதார்த்தங்களை அதிகம் விரும்பி உண்பார்கள். இனிப்பு இல்லாமல் சாப்பாடு இருக்காது. ஏதாவது ஒரு இனிப்பு வகை வைத்து தான் அனைத்து உணவுகளை உண்பார்கள்.
சூரியன் பலன் பெற்றால் அவர்கள் அதிகம் அரிசியால் உருவாகும் உணவுகளை விரும்பி உண்பார்கள். கோதுமையால் செய்யும் உணவுகளையும் விரும்புவார்கள்.
சந்திரன் பலன் பெற்றவர்கள் எந்த நேரமும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். உடல் பருமனும் அதிகமாக இருக்கும். திடீர் என்று இழைத்தும் காணப்படுவார்கள். நல்ல சாப்பிடுவதற்க்கு இவர்களுக்கு பிடிக்கும்.
புதன் பலன் பெற்றால் அதிகம் சாப்பிடுவதைவிட சைடிஸ்களை அதிகம் விரும்புவார்கள். சைடிஸ்களை தான் உணவாகவே சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
குரு கிரகம் பலன் பெற்றால் பால் சம்பந்தப்பட்ட உணவுகளை தான் அதிகம் விரும்புவார்கள். பாலால் தயாராகும் உணவுகளையும் பால் சம்பந்தப்பட்ட குளிர்பதனங்களையும் சாப்பிடுவார்கள்.
ராகு கேது பலன் பெற்றவர்கள் அதிகம் அசைவ உணவுகளை விரும்பி உண்பார்கள். ஒரு சிலருக்கு வறுவல் உணவு இல்லாமல் சாப்பாடு இறங்காது. அசைவம் இல்லை என்றால் உருளைகிழங்கு போன்றவற்றை வறுத்தாவது சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Super analysis sir.. For me Sevvai, Budhan, Saniswaran Placed Strong.. As u said, i like to eat Oiled Items and Side dish as Main dish..
Post a Comment