வணக்கம்!
பொது பரிகாரத்திற்க்கு இலவசமாக ஜாதகம் அனுப்பும் நண்பர்களுக்கு ஏதாவது ஒரு நன்மையை செய்துவிடுங்கள் என்று சொல்லுவது உண்டு. ஒரு சிலர் செய்கின்றனர். பலர் அதனை செய்வதில்லை என்பது நன்கு தெரிகிறது.
தற்பொழுது மாந்தி பரிகாரத்திற்க்கு ஜாதகம் அனுப்பும் நண்பர்களுக்கும் மற்றும் ஜாதக கதம்பம் படிக்கும் நண்பர்களுக்கும் சேர்த்து இந்த விசயத்தை சொல்லுகிறேன். இதனை நீங்கள் செய்துவிடுங்கள்.
உங்களின் ஊரில் வசதியற்ற ஏழை குழந்தைகள் படிப்பார்கள். அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை தற்பொழுதே செய்துவிடுங்கள். அவர்களுக்கு பணமாக புத்தகமாக எழுது பொருட்கள் அல்லது உடையாக கொடுத்து உதவுங்கள்.
இதுவரை நீங்கள் பரிகாரத்திற்க்கு என்று அனுப்பிய பணத்தில் நானும் இந்த உதவியை செய்ய ஆரம்பிக்க போகிறேன். பரிகாரத்திற்க்கு அனுப்பிய பணம் மற்றும் எனக்கு என்று வந்த பணமும் இதற்க்கு பயன்படுத்தபோகிறேன்.
நீங்களும் இதனை முன்கூட்டியே செய்துவிடுங்கள். பலர் கடன் கேட்டு இதற்க்காக அழைவார்கள். நாம் செய்யவேண்டியதை முன்கூட்டியே செய்துவிட்டால் அவர்களுக்கு எளிதாக இருக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment