Followers

Saturday, May 6, 2017

மாந்தி பலன்


வணக்கம்!
         மாந்தி ஐந்தில் நின்றால் பித்ருதோஷம் என்று சொல்லுவதிற்கில்லை. மாந்தி ஐந்தில் நின்றால் அது பூர்வபுண்ணியத்தை மட்டும் கொஞ்சம் கெடுக்கும். பித்ருதோஷத்திற்க்கு அதிகம் வழிவகுப்பதில்லை.

மாந்தி ஐந்தில் நின்றால் குலதெய்வ ஆசியும் கிடைக்கும். ஐந்தில் மாந்தி இருக்கும்பொழுது அவர்களின் குலதெய்வம் அதிகபட்சம் கிராமதேவதைகளாக இருப்பதற்க்கு வாய்ப்பு அதிகம். குலதெய்வத்திற்க்கும் அசைவ உணவை படைக்கும் வழக்கத்தில் அவர்கள் இருப்பார்கள்.

ஒரு சிலர் குட்டிசாத்தான் வழிபாடு செய்பவர்களாகவும் இருப்பார்கள்.  ஒரு சிலர் மாடன் வழிபாடு செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு எல்லாம் ஐந்தாவது வீட்டோடு மாந்தி தொடர்பில் இருப்பார்கள்.

ஆவி வழிபாட்டை கடைபிடிக்கும் பழக்கத்தில் இருப்பார்கள். அதோடு இவர்கள் நாடி செல்வதும் ஆவியை வைத்து பூஜை செய்பவர்களிடம் செல்லுவார்கள். மாந்தி ஆவி உலக தலைவன் என்பதால் இப்படி செல்லலாம்.

மதுரை வரை செல்கிறேன். திரும்பி வந்தவுடன் அதிகபதிவுகளை பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: