வணக்கம்!
ஒருவருக்கு உடலும் மனமும் என்றும் மாசுபடாமல் காத்துக்கொள்ளவேண்டும். இந்த இரண்டும் சரியாக இருந்தால் எப்படியும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும். இன்றைய காலத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்காமல் இருந்தாலும் கூட எதிர்காலத்தில் இந்த இரண்டும் நன்றாக இருக்கும்பொழுது உங்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொள்ளமுடியும்.
உடலையும் நன்றாக காத்துக்கொள்ளவேண்டும். நிறைய பேர்கள் உடலையும் வீண் செய்துவிடுகின்றனர். எனக்கு கூட உடல்நிலையில் ஒரு சில பிரச்சினை இருக்கின்றது. அது இத்தனை வருடங்கள் வெளியில் உள்ள உணவுகளை உட்கொண்ட காரணத்தால் வந்தது. அதனையும் ஒரளவு சரி செய்துக்கொண்டு இருக்கிறேன்.
உங்களின் வாரிசுகளுக்கு வெளியில் உள்ள உணவுகளை கொடுத்து பழக்கவேண்டாம். நீங்களும் வெளியூரில் இருந்து கஷ்டப்பட்டு வேலை செய்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் உணவு பழக்கவழக்கமும் உணவு விடுதிகளை நம்பி இருக்கும். அந்த காரணத்தால் உங்களுக்கும் உடல் பிரச்சினை இருக்கும் ஆனால் உங்களின் வாரிசுகளுக்கு ஒரு நல்ல உணவை கொடுத்துக்கொண்டு வாருங்கள்.
நம்மை பலிக்கொடுத்து நம் வாரிசுகளை உருவாக்க தான் வேண்டும். நாம் எதனை சாப்பிட்டாலும் நம் வாரிசுகளை கண்டதையும் சாப்பிடவிடாமல் நல்ல உணவுகளை கொடுத்து வளர்க்கவேண்டும். அப்பொழுது அவர்கள் எளிதில் வெற்றியை பெறுவார்கள்.
நல்ல உணவை கொடுத்து வளர்த்தால் நல்ல மனமும் அமைந்துவிடும். இரண்டும் சரியாக இருந்தால் எதிலும் ஜெயிப்பார்கள். நீங்களும் முடிந்தளவுக்கு இதனை எல்லாம் கடைபிடித்து வாருங்கள். இறைவனின் சக்தியை பெறுவதற்க்கு உடலும் வேண்டும் மனமும் வேண்டும். அதாவது ஆராேக்கியமாக இருக்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment