Followers

Wednesday, May 3, 2017

மாந்தி பலன்


ணக்கம்!
          மாந்தி நான்கில் நின்றால் நமது தாயாரையும் பாதிக்கும். நம்முடைய வாரிசையும் பாதிக்கும். ஒரு சிலருக்கு வாரிசு இல்லாமலும் இருக்கும். இது என்ன கணக்கு என்று நினைக்கலாம். மாந்தியின் வேலை அப்படி தான் நடக்கும். 

நான்காவது வீடு ஒருவருக்கு அதிகமாக பாதிக்கும்பொழுது தான் அவர்கள் சுகத்தை அனுபவிக்காமல் போய்விட வாய்ப்பு அதிகமாக இருக்கும். சந்நியாசிகளுக்கு இந்த நான்காவது வீடு அதிகமாக பாதிக்கும் என்று சோதிடத்தில் சொல்லுவார்கள்.

தற்பொழுது எல்லாம் இல்லறத்தில் நிறைய சந்நியாசிகள் இருக்கின்றனர். அது என்ன இல்லறத்தில் சந்நியாசிகள் என்று கேட்க தோன்றும். தாலி கட்டியும் சந்நியாசிகளாக பல பேர்கள் இருக்கின்றனர். எந்த நேரமும் சண்டை சச்சரவில் ஒரு பெண் ஈடுபட்டால் கண்டிப்பாக அவன் இல்லறத்திலும் சந்நியாசியாக தான் இருக்கின்றான் என்று அர்த்தம்.

பல இல்லறவாசிகளுக்கும் மாந்தி நான்கில் இருக்கும்பொழுது அவர்கள் சந்நியாசிகளாக வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர் என்று அர்த்தம் கொள்ளவேண்டும். சுகஸ்தானம் அந்தளவுக்கு வாழ்க்கையை பாதிப்பை ஏற்படுத்தும்.

சுகஸ்தானத்தில் மாந்தி நிற்க்கும்பொழுது உங்களின் சுகமும் கெடும்.    பல பேர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கு நோய் தொந்தரவையும் மாந்தி கொடுத்துவிடுகிறது. மருந்துகள் வாழ்க்கைக்கு அவசியமாகிவிடுகிறது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: