Followers

Thursday, May 4, 2017

குலதெய்வம்


வணக்கம்!
          இது கிராமபுறங்களில் உள்ளவர்களுக்கான பதிவு. நகர்புறத்திலும் ஒரு சில இடங்களில் இது இருக்கின்றன. கிராமபுறத்தில் இருந்து நகர்புறங்களுக்கும் செல்கின்றனர். அதனால் உங்களுக்கும் இது பயன்படும்.

கிராமபுறங்களி்ல அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அதிக தகராறு ஏற்படுவதற்க்கு வாய்ப்பு இருக்கும். இப்படி தகராறு அவர்கள் செய்தாலும் நீங்கள் விலகி சென்றுவிடுங்கள். பங்காளி தகராறு செய்தால் அவர்களிடம் இருந்து நீங்கள் விலகி அதாவது அவர்களோடு சண்டை போடாமல் விலகி சென்றால் நீங்கள் விரைவில் முன்னேற்றம் அடைந்துவிடுவீர்கள்.

பங்காளி உங்களோடு சண்டை வந்தால் அவர்களிடம் நீங்கள் விலகி சென்றால் நீங்கள் முன்னேற்றம் அடைவது உறுதி என்று சொல்லலாம். பல ஊர்களில் நான் அனுபவத்தில் பார்த்த வரை இது நடைபெறுகிறது.

உங்களின் குலதெய்வம் கூட உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களை முன்னேற்றம் அடைய செய்யலாம். உங்களுக்கு இடைஞ்சல் கொடுத்தால் உங்களின் குலதெய்வம் உங்களுக்கு நல்ல ஆதரவை கொடுத்து வெற்றி அடைய வைக்கிறது.

பங்காளி ஒருத்தனுக்கு இடைஞ்சல் கொடுத்தால் அவன் முன்னேற்றம் அடைந்துவிடுவான். நீங்களும் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்தால் அதாவது உங்களின் பங்காளிக்கு இடைஞ்சல் கொடுத்தால் உங்களின் குலதெய்வம் உங்களை விட்டு சென்றுவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: