வணக்கம்!
மாந்தி எட்டில் இருந்தால் அவர்களுக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கும். ஆறாவது வீடு தானே கடன் இது என்ன எட்டாவது வீட்டை வைத்து சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம். அனுபவத்தில் வைத்து இதனை சொல்லுகிறேன்.
சோதிடத்தைப்பற்றி நமது தளத்தில் ஒரளவு தான் சொல்லமுடியும். முழுமையான தகவல்களை சொன்னால் அது உடனே திருடிவிடுகிறார்கள் என்பதால் கொஞ்சம் குறைவாக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
ஆறாவது வீடு கடனை கொடுத்தாலும் பெரும்பாலும் எட்டாவது வீடு கெட்டாலும் கூட கடன் வந்துவிடுகிறது. ஆறாவது வீடு கடனை வாங்கிக்கொண்டு திருப்பிக்கொடுப்பார்கள் ஆனால் எட்டாவது வீட்டில் மாந்தி இருந்தால் கடனை வாங்கிக்கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழவைத்துவிடும்.
எட்டில் மாந்தி இருக்கும் நிறைய ஜாதகர்களை நான் பார்த்து இருக்கிறேன். நிறைய கடனை வாங்கிவிட்டு அதனை கட்டமுடியாமல் தலைமறைவாகிவிடுகின்றனர். அவர்களை அந்த நிலைக்கு மாற்றுவதே எட்டில் உள்ள மாந்தியின் செயலாக இருக்கின்றது.
ஒரு தொழில் ஆரம்பித்து அதனை நடத்தமுடியாமல் போய்விடும் நிலை வந்தால் கண்டிப்பாக அவர்களுக்கு நிறைய பணம் தேவைப்படும் அந்த நேரத்தில் கடன் வாங்குவார்கள். இவர் வாங்கி அதில் போட்டு அதுவும் மூழ்கிவிடும். அப்பொழுது தொழிலையும் விட்டுவிட்டு தலைமறைவு ஆகவேண்டிய சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment