வணக்கம்!
நம்முடைய நண்பர்கள் திருமணத்திற்க்கு என்று பொருத்தம் பார்ப்பார்கள். இவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பொருத்தம் பார்த்துக்கொடுத்து கொண்டு இருக்கிறேன். இதில் என்ன ஒன்று என்றால் ஒருவருக்கு முப்பது வயதிற்க்கு மேல் ஆகிவிட்டால் அவர்கள் அதிகம் பொருத்தம் பார்த்துக்கொண்டு இருக்க தேவையில்லை.
வயது ஏற ஏற உங்களுக்கு வரும் வரன்களின் ஜாதகங்கள் குறைந்துவிடும். அதில் உங்களுக்கு சுத்தமான ஜாதகங்கள் எடுத்து கொடுத்தால் இருக்கின்ற ஜாதகமும் போய்விடும் என்பதால் சொல்லுகிறேன்.
ஒரு சில நண்பர்களிடம் வெளிப்படையாகவே சொல்லிருக்கிறேன். 35 வயதிற்க்கு மேல் நீங்கள் எதுவும் பார்க்கவேண்டாம் பெண் அல்லது ஆண் கிடைத்தால் வருகின்ற வரனை வைத்து திருமணம் செய்துக்கொள்ளுங்கள்.
வயது ஏற விடாமல் இளமையில் திருமணத்தை செய்துக்கொள்ளுங்கள். உங்களின் வாரிசுகளுக்கும் இளம்வயதில் திருமணம் செய்து வைத்துவிடுங்கள். வாழ்க்கை சிறக்க இது உதவும்.
அம்மன் பூஜை வரும் வாரத்தில் செய்யப்படும். அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தபவர்கள் செலுத்திவையுங்கள். அம்மன் பூஜை முடிவடைந்தவுடன் பரிகாரம் அறிவிக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment