Followers

Wednesday, September 6, 2017

துணைவரின் செலவு


வணக்கம்!
          உங்களுடைய மனைவி அல்லது கணவன் எப்படி வீணாகப்போவார்கள் என்பதை அறிய ஜாதகத்தில் ஆறாவது வீட்டை வைத்து பார்க்கவேண்டும். ஆறாவது வீட்டு அதிபதி அல்லது அந்த வீட்டில் அமரும் கிரகங்கள் அதனை தீர்மானிக்கும்.

ஆறாவது வீடு அவர்களின் மறைமுக வாழ்க்கையை பிரதிபலிக்ககூடிய ஒன்று. இதனைப்பற்றி நிறைய சொல்லலாம். நீங்கள் உடனே சென்று என்ன செய்வீர்கள் உங்களின் ஜாதகத்தை எடுத்து வைத்து எப்படி என்று பார்த்து சந்தேகப்பீர்கள்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கும். உங்களின் துணைவருக்கும் அது இருக்கலாம் அது மோசமாக போய்விட்டால் தான் பிரச்சினை அதிகமாக மாறிவிடும். ஜாதகத்தை எடுத்துவைத்துக்கொண்டு நோண்டி எடுக்கவேண்டாம். 

ஆறாவது வீட்டின் பலம் என்ன என்பதை சொல்லுவதற்க்கு சொன்னேன். அதோடு ஒன்றை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம். அவர்கள் எப்படி செலவு செய்கின்றனர். தேவையில்லாமல் செலவு செய்கின்றனரா என்பதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

ஆறில் தீயகிரகங்கள் இருந்தால் கண்டிப்பாக அவர்கள் கொஞ்சம் அதிகமாகவே செலவு செய்வார்கள். நான் பார்த்தவரை செலவு செய்கின்றனர் என்று சொல்லலாம். சுபக்கிரகங்கள் இருந்தால் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்ந்துவிடுவார்கள்.

சம்பாதிப்பவன் தான் அதிகம் செலவு செய்யமுடியும். சம்பாதிக்காமல் இருப்பவர் எப்படி செலவு செய்யமுடியும். தான் சம்பாதிப்பது தன்னுடைய குடும்பத்திற்க்கே போதாது அந்த நிலையில் அவர் வேலையை மட்டும் பார்ப்பார்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: