வணக்கம்!
கடந்த மூன்று நாட்களாக பதிவை அதிகம் தரமுடியவில்லை ஒரு சில காரணங்கள் இருந்தன. பதிவு மூன்று நாட்களாக போடக்கூடாது என்று தான் இருந்தேன் தினமும் வருபவர்கள் ஏமாற்றம் அடையகூடாது என்பதற்க்காக பதிவை தந்தேன். இனிமேல் அதிக பதிவுகள் வரும்.
ஆறில் சூரியன் இருந்தால் அது தந்தைக்கும் சம்பந்தப்பட்ட ஜாதகருக்கும் ஆகாது. ஒரு சிலரின் தந்தை இளம்வயதில் விபத்தால் மரணம் அடையவும் வாய்ப்பு அதிகம் இருக்கும். விபத்து நடக்கவில்லை என்றால் ஏதாவது ஒரு நோய் வந்து தாக்கி அவருக்கு பிரச்சினை ஏற்படும்.
சூரியன் ஆறில் இருக்கும் நபர்களுக்கு வருகின்ற நோய் அதிகப்பட்சம் அவர்களின் பரம்பரை வியாதியாக கூட இருக்கலாம். இதயம் சம்பந்தப்பட்ட நோய் அல்லது சர்க்கரை நோய் போன்றவை ஏற்படலாம்.
சூரியன் ஆறில் இருக்கும் நபர்களுக்கு தந்தை வழியில் எதிர்ப்பு அதிகம் வரும். தந்தை வழியில் உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாமல் சண்டை போடலாம். தந்தை வழியில் உள்ளவர்களோடு விலகி செல்வது நல்லது.
அரசாங்க வழியில் வேலைகள் நடைபெறுவதற்க்கு அதிகாரிகள் பிரச்சினை கொடுப்பார்கள். காலதாமதம் ஆனபிறகு தான் வேலை நடக்கும். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment