வணக்கம்!
புரட்டாசி மாதத்தில் திருமலையில் பிரமோற்சவம் நடைபெறும். அதனைப்போல் பல ஊர்களிலும் பெருமாளுக்கு திருவிழா நடைபெறுவது உண்டு. பெருமாளைப்பற்றி ஒரு சில கருத்துகளை சொல்லவேண்டும் என்று இந்த பதிவை தருகிறேன்.
ஒரு சில ஊர்களில் உள்ள பெருமாள் அந்த ஊரில் இருப்பவர்களை பெரியளவில் உயர்த்திவிடுவது உண்டு. அதாவது அந்தந்த ஊர்களுக்கு தகுந்த மாதிரி அவர்களின் நிலையும் உயர்த்தி அந்த பெருமாள் போல அந்த ஊர் சிறப்பாக இருப்பார்கள்.
மன்னார்குடியில் பெருமாள் இராஜகோபாலன் என்ற பெயரோடு விளங்குவார். மன்னார்குடியில் யாராவது ஒருவர் அரசியலில் பெரும் செல்வாக்கோடு இருப்பார்கள். பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கூட இந்த ஊர்க்காரர்கள் இருப்பார்கள்.
பல ஊர்களின் மேலே சொன்னது போல ஒரு வகையில் பிரபலங்களாக இருப்பார்கள். அந்தந்த துறையில் கொடிக்கட்டி பறப்பவர்களாக இருப்பதை நான் பல இடங்களில் பார்த்து இருக்கிறேன்.
நிறைய ஊர்களில் உள்ள பெருமாளைப்பற்றி எனக்கு நன்கு தெரியும். அதாவது அந்த பெருமாளைப்பற்றி தகவல் எனக்கு தெரியும் என்று சொன்னேன். அதனை எல்லாம் பொதுவில் வைக்கவேண்டாம் என்று தவிர்க்கிறேன். நேரில் சந்திக்கும்பொழுது இதனைப்பற்றி கேட்டுக்கொள்ளலாம்.
இதனை உங்களிடம் சொல்லுவதற்க்கு அந்த பெருமாளை நாம் வணங்கினால் அது போல நாம் மாறலாம் என்பதை உங்களிடம் சொல்லுவதற்க்காக சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment