வணக்கம்!
நன்றாக சோதிடம் தெரிந்தவர்கள் ஒன்றை சொல்லுவார்கள். வாழ்வில் ஒரு முறை நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுக்கிரதசா வரவேண்டும். சுக்கிரதசா வந்தால் அந்த ஜாதகத்தை வைத்து நாம் நிறைய சாதித்துக்கொள்ளமுடியும் என்று நினைப்பார்கள். ஒரு சிலர் வெளியில் சொல்லவும் செய்வார்கள்.
சுக்கிரதசா அந்தளவுக்கு ஒரு மகத்தான தசாவாக இருக்கின்றது. சுக்கிரதசா நடந்தால் செல்வ செழிப்பில் வாழ்ந்துவிடலாம் என்ற ஒரு நம்பிக்கையும் வலுவாக இருக்கின்றது என்பது தெரிகிறது. உண்மையில் சுக்கிரதசா நடப்பவர்களை கேட்டால் அந்தளவுக்கு பெரிய வளர்ச்சி இல்லை என்று சொல்லுவார்கள்.
அனைவரும் சொல்லும் சுக்கிரதசா வெளியில் இப்படி இருக்கின்றது என்று நினைக்கலாம். சுக்கிரதசா நடப்பவர்கள் வெளியில் சொல்லும் கருத்து அந்தளவுக்கு வளர்ச்சி இல்லை என்று சொல்லுவார்கள். சுக்கிரதசா ஏன் இவர்களுக்கு வாரி வழங்கவில்லை என்று நானும் பல நாட்களில் யோசித்தது உண்டு.
எந்த தசா நடந்தாலும் சரி அந்த தசாவுக்கு தகுந்த மாதிரியான வழிபாடு அல்லது பரிகாரபூஜைகளை ஒருவர் செய்யவேண்டும். சுக்கிரனை கொடுக்கும் வழிகளை ஒருவர் செய்யவேண்டும். சுக்கிரன் கொடுக்கும் வழியை ஒருவர் மேற்க்கொள்வதில்லை என்று தான் சொல்லவேண்டும் என்று சொல்லலாம்.
ஒருவருக்கு குரு தசா அல்லது ராகு தசா நடந்தால் அந்த இரண்டு தசாவும் ஆன்மீகத்திற்க்கு இழுத்துக்கொண்டு வந்து அவர்களை வாழ வழி செய்துவிடுகிறது. பிற தசாக்கள் அந்தளவுக்கு வழி செய்ய விடுவதில்லை என்றே சொல்லலாம்.
எந்த தசா நடந்தாலும் ஆன்மீகத்தின் பங்கு இருக்கும்பொழுது மட்டுமே அது பெரியளவில் பலனை கொடுக்கிறது. அப்படி இல்லை என்றால் அது குறைந்த பலனை மட்டும் கொடுக்கிறது என்பது தெரிகிறது.
சுக்கிரதசா நடந்த நண்பர்களிடம் ஒரு விசயத்தை சொல்லுவேன். உங்களால் ஒரு முறை வருடத்திற்க்கு ஒரு முறை பூஜை கண்டிப்பாக செய்யவேண்டும். அதற்கு நீங்கள் ஒத்துழைத்து அடுத்த வருடமும் வந்து செய்யுங்கள் என்று சொல்லுவேன். ஒரு முறை செய்வதோடு அவர்கள் சென்றுவிடுவார்கள் மறுமுறை அவர்களால் வரமுடியவில்லை என்பது தான் உண்மை.
சுக்கிரன் போன்ற கிரகங்கள் தானே நிற்கலாம் என்ற ஒரு தைரியத்தை கொடுத்து கெடுத்துவிடுகிறது என்பதையும் இங்கே சொல்லலாம். சுக்கிரனும் ஒரு குரு தான் ஆனால் இவர் கொடுக்கும் வழி என்பது அவர்களை உருபடாமல் செல்ல வைக்கிறது என்பது தான் உண்மை.
சுக்கிரதசா நடந்தால் என்னிடம் வந்து தான் பூஜை செய்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எழுதுப்படவில்லை. எங்கு வேண்டுமானாலும் சென்று அந்த கிரகத்தின் பலனை முழுமையாக தருவதற்க்கு உள்ள வழிகளை மேற்க்கொண்டால் ஒரு பெரியளவில் உள்ள வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment