வணக்கம்!
ஒரு மனிதன் நோயோடு வாழ்க்கையை கழிக்கவேண்டும் என்றால் அது அவ்வளவு எளிதான ஒரு காரியமாக இருக்காது. அந்தளவுக்கு அவன் கஷ்டத்தை அனுபவித்து இருப்பான். வாழ்க்கை முழுவதும் பலர் நோயால் கஷ்டப்படுபவர்களும் இருக்கின்றனர்.
சோதிடமே முன்ஜென்மத்தின் பாவம் புண்ணியத்தை அடிப்படையாக கொண்ட ஒன்று தானே. முன்ஜென்மத்தில் ஒருவர் அதிகமாக பாவத்தை செய்து இருந்தால் அவருக்கு நிறைய கஷ்டங்கள் வரும் என்பது தெரிந்த ஒன்று.
ஒருவருக்கு முன்ஜென்மத்தில் அதிக பாவம் இருந்தால் அவருக்கு ஆறாவது வீட்டோடு லக்கினாதிபதி தொடர்பு இருக்கும். ஆறாவது வீட்டோடு லக்கினாதிபதி தொடர்பு இருந்தால் அவருக்கு நோய் இருந்துக்கொண்டே இருக்கும்.
ஆறாவது வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தாலும் இந்த பிரச்சினை இருக்கும். இப்படி யாருக்கு இருக்கின்றது என்றால் பெரும்பாலும் நல்ல பணவசதிகளை உடையவர்களிடம் இப்படிப்பட்ட நோய்கள் இருக்கின்றன. ஒரு சில ஏழைகளுக்கும் இருக்கின்றன.
ஆறாவது வீட்டு அதிபதியோடு நான்கு கிரகங்கள் இருந்தால் அது படுமோசமான பலனை கொடுக்கும். அதிகப்பட்சம் உள்ள வீடுகள் பாதிக்கப்படுவதால் படுமோசமான பலனை கொடுக்கும். லக்கினாதிபதி மட்டும் சேர்ந்து இருந்தால் பரவாயில்லை வேறு கிரகங்களால் நன்மை வந்து சேரும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment