வணக்கம்!
சூரியன் கிரகம் நன்றாக அமைந்தாலே பெரும்பாலும் ஜாதகர் நல்ல நிலைக்கு வந்துவிடுவார். சூரியனின் ஆற்றலை கொண்டு அனைத்து கிரகங்களின் தீமையையும் வென்று மேலே வரமுடியும். இது சோதிட தகவல் என்பதை விட அனுபவத்தில் பார்த்த தகவலாக உங்களிடம் சொல்லுகிறேன்.
சூரியனுக்கு உகந்த நாளாக ஞாயிற்றுக்கிழமையை நாம் விடுமுறை தினமாக அறிவித்து அன்றைய நாளை பொழுதுபோக்கிற்க்கு அல்லது தூங்குவதற்க்கு பயன்படுத்துகிறோம். விடுமுறை அவர்கள் விட்டது அவர்கள் கடவுளை வணங்குவதற்க்கு என்று விட்டு இருக்கின்றார்கள். நாம் அதனை இப்படி பயன்படுத்துக்கொண்டு இருக்கிறோம்.
எல்லா நாளிலும் நேரம் தாழ்த்தி எழுந்தாலும் ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலையே எழுந்து விடவேண்டும். அன்று சூரியனை பார்த்து நமஸ்காரம் செய்யவேண்டும். நமஸ்காரம் செய்யமுடியாவிட்டாலும் பரவாயில்லை வெளியில் வந்து சூரியனை பார்க்காவது செய்யவேண்டும்.
நான் பார்த்த வரை ஞாயிற்றுகிழமை காலையில் யாரும் குளிப்பது கூட கிடையாது. நான் கேட்டது கூட உண்டு ஏன் காலையில் குளிப்பது கிடையாதா என்று கேட்டுருக்கிறேன். தினமும் காலையில் குளித்துக்கொண்டு இருக்கிறோம் இன்று மட்டும் கொஞ்சம் லேட்டாக குளிப்போம் என்று இருக்கிறேன் என்பார்கள்.
நம்ம ஆளுங்க எதனை செய்யகூடாது என்று சொல்லுகின்றார்களாே அதனை செய்வார்கள். எதனை செய்யவேண்டும் என்று சொல்லுகிறோமோ அதனை செய்யமாட்டார்கள். வரும் ஞாயிற்றுகிழமையில் இருந்து மேலே சொன்னதை தவிர்த்துவிட்டு நல்ல வழியை பின்பற்றி சூரியனை பலப்படுத்துங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment