Followers

Wednesday, September 6, 2017

ஆறாவது வீடு தரும் குடிப்பழக்கம்


ணக்கம்!
          ஒரு செயல் நடைபெறுவதற்க்கு ஒரு தனிப்பட்ட நபர் மட்டும் காரணம் இல்லாமல் அந்த நாடும் அதற்கு தகுந்தார் போல் ஒரு சூழ்நிலையை உருவாக்கினால் அது நடந்து தீரும்.

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் நிறைய இருந்த காலத்தில் நிறைய பேர் குடிக்கு அடிமையாக இருந்தனர். தற்பொழுது அது கொஞ்சம் குறைந்திருக்கு என்று சொல்லலாம். ஒருவர் குடிக்கு அடிமையாவதற்க்கு ஆறாவது வீடு முக்கியத்துவம் பெறும்.

ஆறாவது வீட்டில் நீர்கிரகங்கள் சம்பந்தப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்ட ஜாதகர் குடிப்பார்கள் என்று சோதிடத்தில் சொல்லியுள்ளார்கள். நீர்க்கிரகம் இருந்தால் குடிக்கு அடிமையாகிவிடுவார்கள்.

ஆறாவது வீட்டில் தீயகிரகங்கள் இருந்தாலும் குடிப்பார்கள். சுபக்கிரகங்கள் இருந்தால் அந்த சுபக்கிரகங்கள் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தீயக்கிரகங்களோடு சேரும் காலத்தில் குடிப்பார்கள். அதுவும் கொஞ்சம் காலம் தான் இருக்கும் அதன் பிறகு மாறிவிடுவார்கள்.

சந்திரன் நன்றாக இல்லை என்றால் குடிக்க ஆரம்பிப்பார்கள். மனப்பிரச்சினைக்கு தானே நிறைய பேர் குடிக்கின்றார்கள். ஆறாவது சம்பந்தப்படாமல் ஒருவர் குடிக்க நினைக்க மாட்டார் என்று சொல்லலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: