வணக்கம்!
ஒருவருக்கு திருமணம் ஆகவேண்டும் என்றால் குரு கிரகத்தின் பார்வை கிடைக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். திருமணத்திற்க்கு குருவை விட சுக்கிரனின் பங்கு அதிகமாக இருக்கவேண்டும் என்பது தான் அனுபவத்தில் நான் பார்த்த ஜாதகத்தில் இருந்து தெரிந்துக்கொண்டது.
சுக்கிரன் கிரகம் பாதிக்கப்பட்டால் அவர் திருமணத்திற்க்கு அதிகம் போராட வேண்டியிருக்கும். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிடைப்பது அரிதாக இருக்கும். ஆண்களுக்கு சுக்கிரன் பாதிக்கப்பட்டால் ஆண்மை தன்மை குறைவு ஏற்படும்.
சுக்கிரன் கெடும்பொழுது பெண்களின் தொடர்பை அது துண்டிக்கிறது என்று சொல்லலாம். பெண்களின் தொடர்பை ஏற்படுத்த கூடாது என்று தான் திருமணம் தள்ளிபோக செய்யும். திருமணம் செய்ய போராட வேண்டியிருக்கும்.
சுக்கிரன் பாதிக்கப்படும்பொழுது பிற கிரகங்களின் வழியாக திருமணம் நடைபெற்றாலும் கணவன் மனைவிக்குள் அந்தளவுக்கு தொடர்பு இருக்காது. இரண்டு பேருக்கும் கருத்து வேற்றுமை இருக்கும்.
சுக்கிரன் பாதிக்கப்படும்பொழுது தான் அது கடுமையான வறுமையை மனிதனுக்கு கொடுக்கிறது. வாழ்வில் ஏற்றம் இல்லாமல் போவதற்க்கு சுக்கிரன் கெடுவதும் ஒரு பெரிய காரணம் என்று சொல்லலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment