வணக்கம்!
ஆறாவது வீட்டில் புதன் சம்பந்தப்பட்டால் அந்த ஜாதகருக்கு மாமன் வகையில் இருந்து பிரச்சினைகள் வரும். ஒரு சிலருக்கு மாமன் எதிராளியாக வருவார்கள். பொதுவாகவே புதன் கிரகம் மாமனுக்கு காரத்துவம் உடைய ஒரு கிரகமாக இருக்கின்றது. இது ஆறில் சென்று அமர்ந்தால் மாமன் வகையில் இருந்து பிரச்சினை என்று சொல்லலாம்.
இந்த காலத்தில் மாமன் உறவைவிட மாமனாராக வருபவர்களின் உறவு அதிகமாக மதிக்கப்படும் அல்லவா. மாமனார் உங்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர்பா்ர்த்தால் ஒரு சிலரிடம் இருக்கின்றது. மாமனார் உதவி செய்ய ஆறாவது வீட்டில் புதன்கிரகம் இருக்க கூடாது.
ஒரு வேடிக்கை ஒன்று இருக்கின்றது. அதாவது புதன் கிரகனுக்கு உடைய ராசியான மிதுனராசியை உடையவர்களுக்கு மாமனார் ஒழுங்காக அமைவதில்லை. மாமியார் வீட்டில் சண்டை சச்சரவுகளை உருவாக்கிவிடும். நான் பார்த்தவரை அதிகபடியான மிதுனராசியினர் மாமியார் வீட்டில் அவமதிப்பு நடந்துள்ளது.
மாமனார் மருமகனோடு சண்டை போடுவார். இது சம்பந்தமே இல்லை என்றாலும் மிதுனராசியினர்க்கு மட்டும் இப்படிப்பட்ட பிரச்சினை இருக்கின்றது. காரணமே இல்லாமல் ஒரு சிலர் முறைத்துக்கொண்டு இருப்பார்கள் அல்லவா. அதற்கு காரணம் மிதுனராசியாக நீங்கள் இருப்பதால் மட்டுமே.
கன்னி ராசியினர்க்கு இந்த பிரச்சினை அந்தளவுக்கு வருவதில்லை. கன்னி ராசியினர்க்கு பலருக்கு அவர்களின் மாமனார்கள் நன்றாக சம்பாதித்து கொடுத்து இருக்கின்றனர். மிதுன ராசினர்க்கு மட்டும் இப்படி இருக்கும் என்பதால் கொஞ்சம் பார்த்து நடந்துக்கொள்ளுங்கள்.
கோயம்புத்தூரில் இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். Cell no : 9551155800
கோயம்புத்தூரில் இருக்கிறேன். சந்திக்க விருப்பம் இருப்பவர்கள் என்னை தொடர்புக்கொள்ளவும். Cell no : 9551155800
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Sirrr.... yepdi sir.. Last week only big problem happned btw my family and mamanar family.. Relation break agara alavuku. Main prob is btwn me and my machan.. enga mamanar avanuku support panni ennai pagaithu kondar. Na MITHUNA Rasi, Magara Lagnam, Budhan 6 ku adhipathy. Sani Dasa, Budhan Budhi running. Arumayana Alasal Sir. Wondered to see this post. !!!!!!!!!
Post a Comment