Followers

Monday, September 18, 2017

பாக்கியஸ்தானம்


வணக்கம்!
          ஒருவருக்கு பாக்கியம் கிடைப்பது என்பது எது என்றால் அது உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் சுற்றி பார்த்து விட்டு வருவதில்லை. அமெரிக்காவில் குடியுரிமை பெறுவது பாக்கியம் இல்லை. ஒரு குருவிடம் ஆசி பெற்று அனைத்து கோவிலையும் தரிசனம் செய்வது தான் பெரிய பாக்கியம்.

பாக்கியஸ்தானத்தை நம்ம ஆளங்க சொல்லுவது எல்லாம் வெளிநாட்டிற்க்கு செல்வாரா என்பதை மட்டும் பார்த்து சொல்லுவார்கள். பாக்கியஸ்தானம் சொல்லுவது நல்ல குரு கிடைப்பாரா அதன் வழியில் நிறைய கோவிலை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்குமா என்பதை தான் பார்த்து சொல்லவேண்டும்.

நீங்கள் நினைத்தால் வெளிநாட்டிற்க்கு எளிதில் சென்று வந்துவிடலாம் ஆனால் ஒரு கோவிலுக்கு சென்று வருவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது என்பது தான் உண்மையாக இருக்கும். இதனை நீங்களே செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

பாக்கியஸ்தானத்தை குரு பார்க்கும்பொழுது அல்லது அதில் நன்மை தரக்கூடிய கிரகங்கள் செல்லும்பொழுது உங்களுக்கு தொட்டது எல்லாம் துலங்கும். எடுத்த காரியம் அனைத்தும் நடைபெறும்.

ஒவ்வொரு காரியமும் உடனே நமக்கு நடக்கவேண்டும் என்றால் பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கவேண்டும். பாக்கியஸ்தானம் சரியில்லை என்றாலும் ஒரு குருவின் முழுமையான ஆசி இருந்தால் நமக்கு அனைத்தும் நடந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: